சென்னை வந்தடைந்த சசிகலா!.. திடீரென டிடிவி தினகரனுக்கு... போன் போட்ட நடிகர் ரஜினிகாந்த்!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னிடம் விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சுமார் 23 மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டு பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, முதலில் ராமாவரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்றார். எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அடுத்து, அங்குள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா சென்றார்.

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென போன் செய்துள்ளார். அப்போது, சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னிடம் விசாரித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல் உள்ளனர். ஸ்லீப்பர் செல் என்றால் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம். அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆர்கேநகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்" என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்