சூடுபிடிக்கும் ஆடுகளம்.. 'சட்டமன்ற தேர்தலில்' இன்னும் டஃப் கொடுக்குமா 'சசிகலா விடுதலை?'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்
அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலை ஆகும் தேதியை அறிய, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மனு அனுப்பியிருந்தார். அதற்கு கர்நாடக சிறை நிர்வாகம் சசிகலா வரும் 2021 ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என்று பதில் அறிவித்துள்ளது. அத்துடன் அபராத தொகையான ரூபாய் 10 கோடியை கட்ட தவறினால் அவரது விடுதலையாகும் நாள் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, அதாவது மேலும் 1 வருட காலம் அவர் சிறையில் இருக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரூபாய் 10 கோடி அபராத தொகையை உடனடியாக கட்டி தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை சிறையில் இருந்து வெளியில் எடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி, திமுக கட்சி, மட்டும் அல்லாமல் சசிகலா மற்றும் பல பல புதிய கட்சிகள் களமிறங்கி, வாக்காளர்களுக்கு டஃப் கொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்?!!'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...!
- 'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை!
- “திரும்பி வரேன்னு சொல்லு!”.. ஒருவழியாக 'விடுதலை ஆகும் சசிகலா!'.. 'தேதி விபரத்துடன்' வெளியான 'பரபரப்பு' தகவல்!
- கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை!.. தற்போதைய நிலவரம் என்ன?.. சாத்தியமானது எப்படி?
- 'தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம்'... 'முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை'... வெளியான முடிவுகள்!
- 'ரூ.377 கோடி செலவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வீடு!'.. 'கொரோனா தாக்கம் முடிஞ்சதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!'.. அசத்தும் தமிழக அரசு!
- 'யூஜிசி நடைமுறைப்படியே தேர்ச்சி'... 'அரியர் தேர்வு விவகாரம் குறித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!'...
- 'மருத்துவர்களுடன் நடந்த முக்கிய ஆலோசனை'... '2,000 மினி கிளீனிக்'... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!
- 'பார்வை இழந்தவர்கள் புதுவாழ்வு பெறட்டும்'!.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' முடிவு!.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில்...' 'ரூ.3000 கோடி மதிப்பில் குடிநீர் வசதி திட்டம்...' - தமிழக அரசு அறிவிப்பு...!