"பொறுத்திருந்து பாருங்கள்!!!" .. 4 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டர்கள், செய்தியாளர்கள் மத்தியில் சசிகலாவின் பட்டையை கிளப்பும் பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன சசிகலா, பெங்களூரில் இருந்து இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களிடையே பேசிய சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்று பேசியதுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.
அத்துடன் மக்களை மிக விரைவில் சந்திப்பேன் என கூறிய சசிகலா, கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். புரட்சித்தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என்று தெரிவித்த சசிகலா தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்று அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி பேசினார்.
மேலும், அடக்குமுறைக்கு தான் என்றும் அடிபணியமாட்டேன் என்றும் சசிகலா பேசியுள்ளார். இதனிடையே சசிகலாவை சேர்க்கவோ, அதிமுக-அமமுக இணையவோ 100% வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
சோபாவுக்கு பின்னாடி கிடைச்ச 50 வருட பழைய ‘லெட்டர்’.. படிச்சு பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி..!
தொடர்புடைய செய்திகள்
- Video:‘ஓவர் ஸ்பீடில் ஓவர் டேக்!’.. ‘மின்னல் வேகத்தில் சேஸிங்!’.. ‘விடுதலை’ ஆகி தமிழகம் வரும் சசிகலா காரை மறித்த இளைஞரால் ‘பரபரப்பு!’.. வைரல் வீடியோ!
- 'உடல்நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்த காவலர்கள்'... 'ரூ.3 லட்சம் நிதியுதவி'... முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- வெளிய வந்த நாளே அதிரடி!.. அந்த ஒரு செயல்... "சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும்"!.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?
- ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...!’ - விடுதலையாகி வெளியே வரும்போதே... அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலாவின் ‘அனல் பறக்கும்’ செயல்!!! - விவரம் உள்ளே!
- ‘சிறையிலிருந்து விடுதலை ஆன சசிகலா’!.. ஆனாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.. காரணம் என்ன..?
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
- சசிகலாவைத் தொடர்ந்து.. அவருடன் சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை!.. வெளியான பரபரப்பு முடிவு!
- ‘மூச்சுத்திணறலா? திடீரென குறைந்த ஆக்ஸிஜன் அளவு!’.. சசிகலா இப்போ எப்படி இருக்கார்?.. பெங்களூரில் டிடிவி தினகரன் கூறிய தகவல் என்ன?!
- 'விடுதலை' தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'சசிகலா'!
- எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம்!.. 'அதிமுக அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!'