கமல் சாரின் 'பாசத்திற்கு' நன்றி...! 'கமீலா நாசர், மகேந்திரனை தொடர்ந்து...' மக்கள் நீதி மய்யத்தின் 'முக்கிய நிர்வாகி' ராஜினாமா...! - என்ன காரணம்...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கமீலா நாசர், மகேந்திரனை அடுத்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மக்கள் நீதி மய்யத்தில் நான் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பினையும் ராஜினாமா செய்கிறேன். எனது இந்த முடிவு தனிப்பட்ட காரணங்களால் எடுத்த முடிவு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கமல் மற்றும் எங்கள் குழுவினரின் பாசத்திற்கும் நட்பிற்கும் நன்றி.'' என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் உள்ளிட்ட சிலர் ராஜினாமா கடிதத்தினை கொடுத்த போது, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கொடுத்தனர். தேர்தல் காலச் செயல்பாடுகளை ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் கமலின் பரிசீலனையில் இருக்கின்றன.

கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார் சந்தோஷ்பாபு. இப்போது அவரே கட்சியை விட்டு விலகியுள்ளது மக்கள் நீதி மய்யத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சந்தோஷ்பாபு வந்த பின்னர் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் மகேந்திரன் கட்சியை விட்டு விலகியதாக சொல்லப்படும் நிலையில், சந்தோஷ்பாபுவும் வெளியேறி இருப்பது, மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்