கொரோனா வைரஸ் பீதியால்... தமிழக சட்டப்பேரவையில் கூடிய மருத்துவக்குழு!... வாசலிலேயே குழுமியிருக்கும் செவிலியர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் எதிரொலியாக சட்டப்பேரவை வரும் எம்.எல்.ஏக்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு சானிடேஷன் செய்வதற்காக மருத்துவ குழுவை தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், 4 நாட்கள் விவாதம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இரண்டாவது அமர்வு கூடுகிறது. இதில், முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
ஏப்ரல் 7ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரின் போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. மார்ச் 12ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மீது விவாதம் நடைபெற இருக்கிறது. மார்ச் 16ம் தேதி உள்ளாட்சித்துறை மீதும், 27ம் தேதி காவல்துறை மானியக்கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக சட்டப்பேரவை வரும் எம்.எல்.ஏக்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு சானிடேஷன் (கிருமிநாசினி) செய்வதற்காக மருத்துவ குழுவை தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சட்டப்பேரவை வாயிலில் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
- ‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!
- சென்னை விமான நிலையத்தில் 15 சிறுவனுக்கு கொரானோ அறிகுறி..! ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை..!
- ‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...
- 'கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்வு'... '6 மாநிலங்களுக்கு'... 'மத்திய அரசு எச்சரிக்கை'!
- இந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...
- 'ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த பெண்'... ‘அறிவுறுத்தலை மீறி’...‘வெளியே சுற்றியதால்’... ‘அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்’!
- 'ஃபுல் செக்கப் பண்ணியாச்சு...' 'ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...' 'அவரது 'ரிப்போர்ட்' குறித்த புதிய தகவல்...!
- ‘கொரோனா அச்சத்தில் ஊரே காலியாக’.. ‘ஒரு குடும்பம் மட்டும் செய்த அதிர்ச்சி காரியம்’.. உறைந்து நின்ற அதிகாரிகள்!
- ‘கொரோனா’ பயத்தால்... போலீசாருக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘கணவர்’... மனைவிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...