'பார்க்க குச்சி குச்சியா டியூப் மாதிரி இருக்கு...' 'தக்காளிய எடுத்து போடப்போட உள்ள இருந்து...' - மினி லாரியில் காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் இருந்து கேரளாவிற்கு வெடிமருந்தான சுமார் 7000 ஜெலட்டின் குச்சிகளை தக்காளி பெட்டிக்குள் வைத்து கடத்திய நபர்களை கேரளா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் தற்போது உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கேரளா எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு, வாளையாறு சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பத்தூர் வழியாக கேரளாவிற்கு தக்காளி லோடுடன் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வண்டியில் தக்காளி வைக்கப்பட்டிருந்த ட்ரெய்களுக்கு கீழே குச்சி குச்சியாக டியூப் வடிவில் இருந்துள்ளது. அதை சோதித்து பார்த்ததில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் வண்டியின் ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (30), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (38) எனவும், இருவரும் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேலத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலுவாவிற்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.
35 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார் பிரபு மற்றும் ரவியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்