'நண்பனால் வந்த பிரச்சனை'...'வேற வழி தெரியல சாமி'... 'மொட்டை அடித்த தாய்'... நெஞ்சை உருக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்3 குழந்தைகளின் பசியை போக்க, தலைமுடியை விற்பனை செய்து உணவு வழங்கியதோடு, மீதமிருந்த பணத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்த தாயின் சோகம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பிரேமா. இருவரும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்பம் சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் செல்வத்தின் நண்பர் மூலம் குடும்பத்தில் பிரச்னை உருவானது. செல்வத்தின் நண்பர், இன்னும் எத்தனை நாளுக்கு தான் நீ தொழிலையாக இருக்க போகிறாய். நாம் இருவரும் சேர்ந்து ஒரு செங்கல் சூளை ஆரம்பிக்கலாம் என யோசனை கூறியுள்ளார்.
செல்வத்திற்கும் அது சரி என பட, தான் வேலை பார்த்த செங்கல் சூளை உரிமையாளரிடம் கடன், மற்றும் வட்டிக்கு கடன் என பல இடங்களிலும் 4.50 லட்சம் வரை செல்வம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவரது நண்பர், திடீரென மாயமானார். இதனால் செல்வத்தின் குடும்பம் நொறுங்கி போனது. கடன் வாங்கிய பணமும் போன நிலையில், கடனை கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை கேட்க தொடங்கினார்கள். இதனால் மனமுடைந்த செல்வம் 7 மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவரின் தற்கொலை அவரது மனைவி பிரேமாவை புரட்டி போட்டது. குடும்பத்தை நடந்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான அவர், வீமனூரில் உள்ள செங்கல் செங்கல் சூளையில் பிரேமா கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த சூழ்நிலையில் பணத்தை கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்கள். கடன் நெருக்கடி ஒரு புறம் இருக்க, 3 குழந்தைகளும் பசியால் வாட வாடியுள்ளார்கள்.
இதனால் மனமுடைந்த அவர், தனது தலையை மொட்டை அடித்து, தனது தலைமுடியை 150க்கு விற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். மீதமிருந்த பணத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது செங்கல் சூளையில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றியுள்ளார்கள். இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த பாலா என்பவர் தனது முகநூல் பக்கத்தில், பிரேமா படும் இன்னல்கள் குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார்.இதனை பார்த்த பலரும் அவருக்கு உதவ முன்வந்தார்கள்.
இதையயடுத்து பிரேமாவிற்கு கடன் கொடுத்தவர்களிடம் பேசி, பணத்தை கொடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டர். பாலா முகநூல் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம், 1 லட்சத்திற்கு மேல் பணம் கிடைத்தது. மீதமுள்ள பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்து, பிரேமாவுக்கு கடன் கொடுத்தவர்களிடம் வழங்கியுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நெட்டிசன்கள் சேர்ந்து காப்பாற்றியுள்ளதை பலரும் பாராட்டி வரும் நிலையில், இனிமேல் எந்த தருணத்திலும் தற்கொலைக்கு முயல மாட்டேன் என பிரேமா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'?... பரபரப்பு நிமிடங்கள்!
- ‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’!.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..!
- ‘#15YearsOfDhonism'.. 6 அடி உயர ‘தோனி கேக்’!.. மாஸ் காட்டிய பேக்கரி..!
- இறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...
- 'பேயை ஓட்டிரலாமா?'.. 'பிரம்பால் அடித்து வெளுத்த திருநங்கை!'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!'
- 'ஆட்டோ ஓட்டுநரால்'... கல்லூரி 'மாணவி'க்கு நேர்ந்த பரிதாபம்... பரிதவித்துப் போன 'பெற்றோர்'!
- செம பயம்..'பழைய' பேப்பருக்குள்ள 'ஒளிச்சு' வச்ச '16 பவுன்' நகை.. மறந்து போய் இப்படியா பண்றது?
- தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!
- ‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’! டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘எவ்வளவோ கூப்பிட்டும் வராத மனைவி’... ‘நண்பர்களுடன் சேர்ந்து’... ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘விசாரணையில் வெளியான தகவல்’!