‘காதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில்’... ‘புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியரை, பெண்ணின் வீட்டாரே தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). இவரும், அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு வீட்டார் தரப்பிலிருந்துமே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் எதிர்ப்பை மீறி, காவலாண்டியூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
புதுமண தம்பதியரான இருவரும் ஈஸ்வரன் என்பவரின் வீட்டில் தங்கிவிட்டு பின்னர் வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், ஈஸ்வரனை தாக்கி புதுமண தம்பதி குறித்து கேட்டுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வனையும் இளமதியையும் தாக்கியதோடு அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். அப்போது இளமதியின் தந்தை உள்ளிட்டோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அரசு பள்ளி ஒன்றில் புதுமண தம்பதியரை சிறை வைத்திருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணம் செய்துவைத்த ‘நண்பனே’ செய்த கொடூரம்... தப்பித்த ‘6 மாத’ குழந்தை... இளம் ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘காதல் விவகாரத்தில்’... ‘நண்பனுக்கு உதவப்போய்’... ‘ஊர்மக்களால் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!
- 'என் புருஷனுக்கு யாரும் வேல குடுக்கல, அதுனால தான்' ... பேரனின் மருத்துவ செலவிற்கு வேண்டி ... வயதான தம்பதிகளின் நெஞ்சை உருக்கும் நிலை
- VIDEO: ‘கட்டையால் தலையில் ஓங்கி விழுந்த அடி’!.. ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. பதபதக்கவைத்த வீடியோ..!
- ‘நள்ளிரவில்’ கேட்ட குழந்தையின் ‘அழுகுரல்’... கணவன், மனைவி உட்பட ‘3 பேருக்கு’ நேர்ந்த கொடூரம்... தப்பிய ‘இளைஞர்களை’ மடக்கிப் பிடித்த போலீசார்...
- 'சட்டையை' கொத்தாக பிடித்து 'இழுத்துச்' சென்று... 'புகார்' கொடுக்க வந்தவருக்கு 'அதிர்ச்சி' மேல் அதிர்ச்சி... 'புரியாமல்' புலம்பிய 'வாலிபர்'...
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- 'அவங்க மட்டும் இல்லன்னா, நானும் என் குழந்தைங்களும்...' 'என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன்...' தாயாக மாறிய இன்ஸ்பெக்டர்...!
- ‘நேர்ல உங்கள பாக்கணும்’... ‘திருமணத்திற்கு’ முன் போன் செய்த ‘இளம்பெண்’... நம்பிச் சென்ற ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த பரிதாபம்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்!...
- ‘நேர்ல பாத்ததும் பின்வாங்கிருவான்னு நெனச்சேன்’.. ‘திட்டிக்கூட பாத்தேன்’.. ‘ஆனா..!’ நெட்டிசன்களை உருகவைத்த ‘காதல்கதை’!