‘அலறல்’ சத்தம் கேட்டு ‘பதறியோடிய’ பெற்றோர்... ‘திருமணமான’ 4 மாதத்தில்... கணவன், மனைவி ‘அடுத்தடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் திருமணமான நான்கே மாதத்தில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபக் (24) என்பவரும், அவருடைய மாமா மகளான வேதவள்ளி (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல வேதவள்ளி கணவரை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்க, வேதவள்ளியின் பெற்றோர் பதறியடித்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக வேதவள்ளியை மீட்ட அவர்கள் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மனைவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்த தீபக் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வேதவள்ளி சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் வலி தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. திருமணமான நான்கே மாதத்தில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அடுத்தடுத்து’ நடந்த சோகம்... தொடர்ந்து ‘கட்டாயப்படுத்திய’ பெற்றோர்... ‘சென்னையில்’ பெண் எடுத்த ‘விபரீத’ முடிவு...
- ‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...
- 'லவ் பண்றப்போ என் கேரக்டர் தெரியலையா ...?!' 'இப்படி என்ன ஏமாத்திட்டியே ...' காதல் சண்டை...!
- மின்விசிறியில் மனைவி, வேப்பமரத்தில் கணவன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் உறைந்த குடும்பம்..!
- தொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘இரவு ஹோட்டலில் சாப்பிட விரும்பிய மனைவி’.. ஒரு காரணத்தை சொல்லி மறுத்த கணவன்.. காலையில் நடந்த சோகம்..!
- ‘வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்’.. ‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்..!
- “வரவேற்பு நிகழ்ச்சியில் வந்த வேற லெவல் சோதனை!”.. “போர்க்களமான திருமண மண்டபம்!”
- ‘திருமணமான’ இரண்டே ஆண்டுகளில்... ‘கணவர்’ இல்லாத நேரத்தில் நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...
- ‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...