‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகிலுள்ள அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான கோபி குடித்துவிட்டு வந்து அடிக்கடி மோகனேஸ்வரியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக கோபியைப் பிரிந்து மோகனேஸ்வரி தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அங்கு அருகிலுள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்துவந்த மோகனேஸ்வரி நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த கோபி அவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கோபி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனேஸ்வரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மோகனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள கோபியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'!
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. தனியார் பேருந்துகள் ‘நேருக்கு நேர் மோதி’ பயங்கர விபத்து..
- ‘எங்க கேங்ல சேரமாட்டியா’... ‘மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்’... ‘நண்பனின் அதிர்ச்சியளித்த வாக்குமூலம்’!
- ‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘2 ரூபாய்க்கு நடந்த சண்டை’.. ‘கம்பியால் அடித்த நபர்’.. சுருண்டு விழுந்த இளைஞர்..!
- ‘தங்கச்சியை இப்டி செஞ்சிட்டாங்களே’!.. தோப்பில் சடலமாக கிடந்த பள்ளி சிறுமி..! பக்கத்துவீட்டுக்காரரின் பகீர் வாக்குமூலம்..!
- 'யெஸ்-ஆ நோ-வா?'.. 'என்னா ஒரு கான்ஃபிடண்ட்..'.. ட்ரெண்ட் ஆகும் ஃபாய்பிரண்ட் செய்த காரியம்!
- ‘கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு’... ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’... ‘இளம் தம்பதி செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..
- 'பபுள்கம்' மோசடி.. என்ன 'தலை' ஒரு பக்கம் 'வீங்கி' இருக்கு... கையும் 'களவுமாக' பிடித்த போலீஸ்!