‘கால்ல வளையல்.. தனித்தனி சேர்’.. கோலகலமாக நடந்த வளர்ப்பு நாயின் வளைகாப்பு.. அசத்திய குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஹேமராணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் ஹைடி என்ற ஆண் பொமேரியன் வகை நாயும், சாரா என்ற பெண் பொமேரியன் வகை நாயும் வளர்த்து வருகிறார்கள். இதில் சாரா நாய் கர்ப்பமாக உள்ளது.
இதனை அடுத்து கடந்த 13-ம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு நாற்காளிகளில் இரு நாய்களையும் அமர வைத்து மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு சாராவிற்கு வளையலை மாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வந்தவர்களுக்கு இனிப்பு, காரம் என 5 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. சாராவிற்கு நாய்க்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை கொடுத்து நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டோ சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த நாய்களை வாங்கி வந்து வளர்த்து வருவதாக உரிமையாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். தனது மகள் இந்த இரு நாய்களையும் அன்பு காட்டி வளர்த்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
"நான்தான் சொன்னேன்.. என்கிட்டே உங்க கோபத்தை காட்டுங்க".. பிரதமர் மோடி ஓபன் டாக்.. என்ன நடந்துச்சு..?
தொடர்புடைய செய்திகள்
- கழிவு நீரில் நிர்வாணமாக மிதந்த பெண் சடலம்.. ஆடு மேய்ப்பவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஆத்தூரில் பரபரப்பு..!
- பேஸ்புக் காதல்.. 3 நாள் பேசாம தவித்த காதலன்.. கடைசியா பொண்ணோட பாட்டி போனில் சொல்லிய விஷயம்.. நொறுங்கிப்போன இளைஞர்..!
- என்ன அதுக்கு நியாபகம் இருக்குமா? 12 வருஷம் முன்னாடி கடைக்கு போயிருந்தப்போ, ஒருநாள்.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய உரிமையாளர்
- வளைகாப்பு நடந்த அடுத்த நாளே இப்படியா நடக்கணும்.. நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்..!
- "ராத்திரியும் அங்க தான் இருக்காரு.." கண்டித்த மனைவி.. கண்டுக்காத கணவன்.. நடந்த விபரீதம்
- என மனைவி செம போதை.. ஃபுல் மப்புல சொன்ன விஷயம்.. உச்சக்கட்ட வெறியான கணவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்
- பணியாரம் வாங்கிட்டு வந்துருக்கேன்.. கொஞ்ச நேரத்துல மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. என்ன நடந்தது?
- என் உயிர் போனாலும் பரவாயில்ல.. எஜமானர் குடும்பத்துக்கு எதுவும் ஆக கூடாது.. நாய் எடுத்த ரிஸ்க்.. நெகிழ வைக்கும் சம்பவம்
- ‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!
- சேலம் அருகே பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு?.. பயந்து ஓடிய மக்கள்.. உண்மை என்ன..? அதிகாரிகள் விளக்கம்..!