'அண்ணனுக்கு உடம்பு தான் சரி இல்ல...' 'அதுக்காக இப்படியா ஒரு தம்பி பண்ணுவார்...' - பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய அண்ணனை இறந்துவிட்டார் என குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் 70 வயதான சரவணன். சரவணனின் வீட்டில் வாய் பேச இயலாத அவரின் மனைவியும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அண்ணனும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று, தன் அண்ணன் உயிரிழந்துவிட்டார் என இறந்தவர்களை வைக்கும் குளிர்சாதனப்பெட்டியில் முதியவர் பாலசுப்பிரமணியத்தின் உடலை வைத்து, உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமையன்று குளிர்சாதனப் பெட்டியை திரும்பி எடுக்கவந்த நபர்கள், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட இறந்ததாக கூறப்பட்ட நபரின் உடலில் அசைவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து முதியவர் சரவணனிடம் கேட்டபோது அவருக்கு உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டதாகவும், அவரது ஆத்மா மட்டும் இழுத்துக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார். எந்தவித பதட்டமும் இல்லாமல் கூறியுள்ளார். மேலும் பெட்டிக்குள் இருந்த பாலசுப்பிரமணியம் வலிப்பு வந்தார் போல அவதியுற்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல்துறையினர், குளிர்பதனப் பெட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்ரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் முதியவர் குளிர்பதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உயிரோடு தான் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்