"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி!" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், மரியாதைக்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஐந்து கோடியை சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டதோடு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் பங்கேற்க தங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தம் நன்றியையும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை சக்தி மசாலா பிரைவேட் லிமிட்டெட் மேலாண்மை இயக்குநர் P.C.துரைசாமி மற்றும் இயக்குநர் D.சாந்தி உள்ளிட்ட இருவரின் ஒப்பத்துடன் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'
- ‘அப்பா இறந்துட்டாரு’!.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- ‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி?’...
- 'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்!
- 'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்!
- '60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி!'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு!!
- ‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்!
- 'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி!'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்!... என்ன நடந்தது?
- '1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'!
- சென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்!