'ஜீவ சமாதி அடையப்போறேன்’... ‘சிவன் அனுமதி கிடைச்சிருச்சு’... ‘போஸ்டரால் குவியும் கூட்டம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை அருகே ஜீவ சமாதி அடையப்போவதாக 80 வயதான சாமியார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி அருகே உள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி. 80 வயதுடைய இவர், சிறுவயதிலிருந்தே சிவ பக்தர். சிவபக்தரான இருளப்பசாமி, பல ஆண்டுகளுக்கு முன்னாள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் கைவிட, அன்று இரவு அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றி பிழைக்க வைத்ததாகவும், அன்று முதல் சிவாலயங்களுக்கு கால்நடையாக நடந்து சென்றே வழிபட்டு வருவதாகவும் இருளப்பசாமி தெரிவித்துள்ளார்.

இதனால் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கும் தொடர்ந்து பயணித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜீவ சமாதி அடைய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கான சமயம் தற்போது வந்துள்ளதாக சில நாள்களுக்கு முன் போஸ்டர் ஒட்டப்பட்டதால், பொதுமக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகைதந்து தொடர்ந்து ஆசி பெற்று வந்தனர். இதற்காக 30 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்து வந்த இருளப்பசாமி, தற்போது 12 மணியில் இருந்து, அதிகாலை 5 மணிக்குள் ஜீவ சமாதி அடையப் போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று இருளப்பசாமியிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்கின்றனர். ஜீவ சமாதி நிகழ்ச்சியை காணவரும் வரும்  பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவர் ஜீவ சமாதி அடையும் இடத்தில் குழி தோண்டப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

SIVAGANGAI, JEEVASAMATHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்