ஊரடங்கால் தவித்த 'ரஷிய' தம்பதி... 'திருவண்ணாமலை' மீது 'தியானம்'... கண்டுபிடித்த டிரோன் கேமரா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவின் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை கருத்தில் கொண்டு ஊரடங்கை மே மாதம் மூன்றாம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் புதிய நடவடிக்கையாக மக்கள் நடமாடுவதை கண்காணிக்க டிரோன் கேமராக்களை பல இடங்களில் பறக்க விட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலை மீது டிரோன் கேமரா பறந்த போது ரமணர் மலை அருகே இரண்டு வெளிநாட்டினர் நடந்து செல்வது தெரிந்தது. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று இருவரையும் மலையின் கீழ் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ மாகாணத்தை சேர்ந்த தம்பதி என்பதும், ஆறு மாத விசாவில் ஆன்மீக பயணமாக இந்தியா வந்ததும் தெரிய வந்தது. பல மாநிலங்களில் ஆன்மீக பயணங்களை முடித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக திருவண்ணாமலை வந்துள்ளனர். ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் வந்ததால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும், ஒரு வாரத்திற்கு முன்னதாக கையிலிருந்த பணமும் காலியாகி விட, விரக்தியில் தம்பதி ரமணர் குகை அருகே சென்று பசியைக் கட்டுப்படுத்த தியானத்தில் ஈடுபட்ட போது டிரோன் கேமராவில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து காவல் துறை சார்பில் அவர்களுக்கு தங்க இடமும், உணவு பொருட்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பது வரை அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என திருவண்ணாமலை எஸ்.பி கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர் இதே போன்று திருவண்ணாமலை குகையில் ஒளிந்திருந்த சீன இளைஞர் ஒருவரை போலீசார் மீட்டு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'!
- "வீட்டுல சும்மா இருக்கறதில்ல"... "எதையாச்சும் டிரெண்ட் பண்ணிட்டே இருக்க வேண்டியது"... வைரலாகும் 'பில்லோ சேலஞ்ச்'!
- "என் பொண்ண கட்டி அணைச்சு கொஞ்சி எவ்ளோ நாளாச்சு"... உற்சாகமடைந்த "மகள்"... 'நெஞ்சை' கரைய வைக்கும் 'செவிலியர்' - மகள் 'வீடியோ'!
- உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...
- 'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'?... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்!
- ‘பசிக்கு தண்ணிய குடிச்சுட்டு இருக்கும்’.. குழந்தைங்க ‘பசிக்குதுனு’ அழுறாங்க.. ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்..!
- கொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...
- "என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்"... 2000 'கி.மீ' தொலைவில்... உயிரிழந்த "கணவர்"... கலெக்டர் செய்த உதவி!
- "இனிமே சரிப்பட்டு வராது"... "பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்!
- இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...