"கொடுத்த கடனையா திருப்பிக் கேக்குற..." ஒரே ஒரு 'வதந்திதான்'... ஒட்டுமொத்தமா சோலிய 'முடிச்சுட்டான்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் சிக்கன் மூலம் கொரோனோ வைரஸ் பரவியதாக வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரப்பிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

அண்மையில் கோழி இறைச்சி வழியாக கொரோனா வைரஸ் பரவுவதாக, கர்நாடக மாநிலத்தில் சமூக வலைதளங்கள் வழியாக பரவிய வதந்தியால் சென்னையில் சிக்கன் விற்பனை சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை  180 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் கோழி இன்று 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் கடந்த மாதம் வரை 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உரித்த கோழி  தற்போது 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

விலை குறைந்த போதிலும் கொரோனா பரவுவதாக பரவிய வதந்தியால் விற்பனை இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்துவருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில், சிக்கன் கடை முதலாளி பக்ருதின் என்பவர், கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக கடுப்பான 17 வயது சிறுவன் சக்திவேல், சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ் ஆப் மூலம் வதந்தியை பரப்பி விட்டார். இது வைரலாக பரவ ஒட்டுமொத்தமாக சிக்கன் விற்பனை சரிந்தது.

இதுகுறித்து சிக்கன் கடை நடத்திவரும் பக்ரூதின் அளித்த புகாரின் பேரில், 17 வயது சிறுவனான சக்திவேலை கைது செய்த போலீசார் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

CUDDALORE, CHICKEN, CORONA, RUMORED, BOY ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்