'இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது'.. பரவிய வீடியோ .. கிடைத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பயணியிடம் தகாத வார்த்தைகள் பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரின் உரிமத்தையும் 6 மாத காலத்துக்கு ரத்து செய்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும், கும்பகோணத்தில் இருந்து திருச்சிக்குத் தயாராக நின்ற பேருந்தில் ஏறிய பண்டாராவாடை எனும் ஊர்க்கார பயணி ஒருவரிடம், பேருந்து வழியில் எங்கும் நிற்காது என்றும், நேராக தஞ்சாவூரில்தான் நிற்கும் என்றும் கூறி கீழிறங்கிச் சொல்லி வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இறங்க மறுத்த பயணி, ஏன்? பேருந்தில்  சீட் எல்லாம் காலியாகத்தானே இருக்கிறது? என்று கேட்டுள்ளார். மேலும் இறங்க மறுத்துமுள்ளார். இதனால், ‘ஒனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. எறங்குயா’.. என தகாத வார்த்தைகளை பிரயோகிக்கத் தொடங்கிய பேருந்து நடத்துநரையும், ஓட்டுநரையும் அந்த பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதன் பின்னர் சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் கொடுத்த புகாரின் பேரில், கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் இந்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஷியாம் சுந்தரையும் ஓட்டுநர் கோகுல் பிரசாத், கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் தங்கள் மீதுள்ள தவறினை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரின் உரிமமும் 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்பட்டது.

BUS, DRIVER, CONDUCTOR, PASSENGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்