'நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் உபயோகத்தில் இல்லை...' 'அப்படின்னா, இந்த பார்சல்ல ஏதோ வில்லங்கம் இருக்கு...' - ஓப்பன் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கூரியர் பார்சலில் இருந்த பொருட்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு ஒரு சரக்கு விமானம் நேற்று (07-03-2021) இரவு வந்துள்ளது. அதில் இருந்த சரக்கு பார்சல்கள் மற்றும் கொரியர் தபால் பார்சல்களை சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு கொரியர் பார்சல் வந்துள்ளது. அதற்குள் என்ன இருக்கிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.

உடனடியாக சுங்க துறை அதிகாரிகள் பார்சலில் இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர். அப்போது அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி குறித்து விவிசாரித்ததில் அதுவும் போலி என்று தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதற்குள் மிகவும் விலை உயர்ந்த 95 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை உடனே பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்