'10 பைசா கொடுத்தா போதும்'...'பட்டையை கிளப்பும் அதிரடி ஆஃபர்'...குவிந்த மக்கள் கூட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பழைய நாணயங்களை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தி அவற்றை மக்களிடம் எடுத்து செல்லும் விதமாக, திண்டுக்கல்லில் பிரபலப்படுத்தி வருகின்றனர். அதன் முதல் முயற்சியாக கடந்த வாரத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பிரியாணி கடையில், பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
ஐந்து பைசாவிற்கு பிரியாணி வழங்கப்பட்டது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் திண்டுக்கல் சந்து கடை பகுதியில் உள்ளதனியார் துணிக்கடையில், பழைய பத்து பைசா நாணயத்திற்கு ரூபாய் 150 மதிப்பிலான டி-ஷர்ட் வழங்கப்பட்டது. இந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளில் பரவ, அதிகாலை முதலே 500க்கும் மேற்பட்டோர் அந்த துணிக்கடை முன்பு குவியத் தொடங்கினர்.
இதையடுத்து நீண்ட வரிசையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு கடை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய கடையின் உரிமையாளர் அமீன், பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் டி-ஷர்ட்டை 10 பைசாவிற்கு வழங்குவதாக தெரிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஹாஸ்டலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த மாணவி’.. ‘ரூமுக்குள் நுழைந்த நல்லபாம்பு’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- இருசக்கர வாகனத்தின் மீது ‘தனியார் பேருந்து மோதி கோர விபத்து’.. ஆத்திரத்தில் பொதுமக்கள் ‘பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு’..
- ‘தனியே கழன்று சென்ற டயர்கள்’.. வந்த வேகத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!
- திண்டுக்கல் இனி சுவிட்சர்லாந்து... மன்சூர் அலிகானின் நூதனப் பிரச்சாரம்!
- 'தந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு...தாயை கத்தியால் குத்திய எம்.பி.ஏ பட்டதாரி'...அதிரவைக்கும் காரணம்!