தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல மாநில போலீசால் தேடப்பட்ட ரவுடி.. நெல்லையில் என்கவுன்டர்.. யார் இந்த நீராவி முருகன்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது.
இவர் தனது கூட்டாளியான பவானி ஈஸ்வரனுடம் ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நீராவி முருகன், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுட்து இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த கும்பல் பதுங்கி இருந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர்.
அப்போது நீராவி முருகன் உள்ளிட்ட கும்பல் காரில் ஏறி தப்ப முயனறதாக சொல்லப்படுகிறது. ஆனால் கார் சாலையோர சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியுள்ளது. உடனே அந்த காரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதாக சொல்லப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நீராவி முருகன் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்ற நபர்கள் தப்பி ஓடிய நிலையில், கார் டிரைவர் மரிய ரகுநாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செங்கல்பட்டு என்கவுண்டர்.. இரட்டைக் கொலைக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுக்கொடுத்த பெண்.. வெளியான பரபரப்பு தகவல்..!
- செங்கல்பட்டில் 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்த போலீசார்.. வெளியான பரபரப்பு பின்னணி..!
- 'சென்னையில் பரபரப்பு'... 'மிரட்டி மாமூல் வசூல், பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை'... சென்னை காவல்துறை அதிரடி!
- ‘சினிமா க்ளைமேக்ஸை’ மிஞ்சும் ‘திக்..திக் நிமிடங்கள்!’.. விகாஸ் துபே ‘என்கவுண்டர்!’ நடந்தது எப்படி?.. சர்ச்சையைக் கிளப்பும் கேள்விகள்!
- 'என் ரத்தத்தை பாலா கொடுத்தேனே'... 'இப்படி அநியாயமா கொன்னுட்டான்'... ரோட்டுல அவன சுட்டு போடுங்க!
- 'டிஎஸ்பிக்கு வந்த போன் கால்'... 'நம்பி போன அதிகாரிகள்'... 'தெறித்த துப்பாக்கி ரவை'... 'அதிகாலையில் நடந்த பயங்கரம்!
- ‘ஏற்கெனவே 9 பேரை இதேபோல’... ‘என்கவுன்டருக்கு’ முன் கொடுத்த ‘அதிரவைக்கும்’ வாக்குமூலம்..
- 'பொண்ணுங்க மேல கை வைக்க யோசிக்கணும்'...'இனிமேல் தப்ப முடியாது'...'ஜெகனின் புதிய அதிரடி'!
- ‘என்கவுன்டர்’ நடந்தது ‘எதனால், எப்படி?’.. ‘உண்மையை’ உடைத்த காவல் ஆணையர் ‘சஜ்ஜனார்!’..
- '4 பேரையும் அநியாயமா கொன்னுட்டாங்க'...'இதுக்கு கொண்டாட்டமா?...கொதித்த மனித உரிமை ஆர்வலர்கள்!