3 மணி நேர பயணம் இனி 30 நிமிஷம் தான்.. பழனி to கொடைக்கானல்.. ரூ.450 கோடியில் வியக்கவைக்கும் திட்டம்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு 30 நிமிடங்களில் செல்லும் வகையில் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெளிலதான் அழகு நிலையம் & ஸ்பா.. உள்ள நடந்ததே வேற.. போலீஸ் ரெய்டில் சிக்கிய தம்பதி.! புதுச்சேரியில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில். தமிழகம் மட்டும் அல்லாது, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலா தலம் கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த இரண்டு இடங்களையும் இணைக்க ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல 3 மணிநேரங்கள் ஆகும். கொடைக்கானல் மலையில் பல ஊசிமுனை வளைவுகள் இருப்பதும் இந்த பயண நேரத்தை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகும். இந்நிலையில், இந்தியா முழுவதும் 18 இடங்களில் ரோப் கார் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதில் பழனி - கொடைக்கானல் இடையேயும் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரியாவில் இருந்து நிபுணர்கள் குழு கொடைக்கானலில் ரோப்கார் ஸ்டேஷன் அமைய இருக்கும் குறிஞ்சி ஆண்டவர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்திருக்கின்றனர். பழனி மற்றும் கொடைக்கானல் இடையேயான தூரம் 64 கிலோமீட்டர் ஆகும். இந்த பயணம் நேர்க்கோட்டில் அமைவதால் இரண்டு இடங்களுக்கு இடையேயான தூரம் 12 கிலோமீட்டராக குறையும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ரோப்கார் மணிக்கு 15 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரோப்கார் மூலமாக பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு 30 முதல் 40 நிமிடங்களில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் குறித்து முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | காரில் பட்டாசு கொளுத்திய 'ரகடு பாய்ஸ்'.. தொக்கா தூக்குன போலீஸ்.. ரோட்லயே வெச்சு ஸ்பாட் பனிஷ்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!

PALANI, KODAIKANAL, ROPECAR, ROPECAR SERVICE, ROPECAR SERVICE BETWEEN PALANI AND KODAIKANAL, ரோப்கார் சேவை திட்டம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்