'எமனாக வந்த ஊஞ்சல்'...'கழுத்தை சுற்றிய நைலான்'...'பெற்றோர் முன்பு சென்னையில்' நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊஞ்சலில் விளையாடிக்கொண்டு இருந்த பள்ளி மாணவனின் கழுத்தில் நைலான் கயிறு இறுக்கியதால், உயிரிழந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கீர்த்திவாசன். தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் கீர்த்திவாசன் தன் வீட்டில் உள்ள ஊஞ்சலில் சுற்றியபடி விளையாடி கொண்டிருந்தான். திடீரென வேகமாக சுற்றிய போது,  எதிர்பாராத வகையில் நைலான் கயிறு கீர்த்திவாசன் கழுத்தை இறுக்கியது. இதில் சிறிது நேரத்திலேயே கீர்த்திவாசன் மூச்சு திணறி மயங்கினான்.

இதனை சற்றும் எதிர்பாராத சிறுவனின் பெற்றோர், அதிர்ச்சியடைந்து மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாணவனை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கீர்த்திவாசன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊஞ்சலில் விளையாடிய பள்ளி மாணவன், கழுத்தில் கயிறு இறுக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ACCIDENT, SCHOOLSTUDENT, ROPE, NECK, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்