‘ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்’... ‘மக்களுக்கு தெரியும்’... ‘எம்எல்ஏ ரோஜா அதிரடி பதில்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின், அரசியல் பிரவேசம் குறித்து நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா செல்வமணி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர், நடிகை ரோஜா செல்வமணி. இவர், அந்த தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலைய மேம்பாட்டு பணியினை மேற்கொள்வதற்காக, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழகத்தில் ஆளுமை மிக்கத் தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார்.
அ.தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வழிநடத்தி, தனித்தன்மையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும்’ பாராட்டு தெரிவித்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மேலும், மக்களை நேரடியாக சந்திக்காமல், யாராலும் அரசியலில் வெற்றி பெறமுடியாது.
மக்கள் எளிதில் தனக்கு வாக்கு அளித்துவிடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால், அது நடக்காது’ என அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு, ‘ரஜினி ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்’ என்று ரோஜா கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பொங்கல் பரிசு ரூ.1000’.. ‘இலவச வேட்டி, சேலை’.. தொடங்கி வைத்தார் முதல்வர்..!
- 'என் பிரச்சனைய தீர்த்துட்டு போங்க!'.. முதல்வர் காரை வழிமறித்து.. 'கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு'.. இளைஞரால் பரபரப்பு!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘பொங்கல் பரிசு ரூ.1000’.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்போ..? வெளியான அறிவிப்பு..! விவரம் உள்ளே..!
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசு’!.. ‘ஆனா இவங்களுக்கு மட்டும்தான்’.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘உலகப் படங்களுக்கு நிகரான தமிழ் படங்கள்’... ‘நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்’... விவரம் உள்ளே!
- முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில், தமிழகத்தில் 8 தாலுகாக்களுடன் உதயமாகியுள்ள புதிய மாவட்டம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு'... 'முதல்வர் அதிரடி பதில்'... ‘சீமான் கடும் விமர்சனம்’!