இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்... ஸ்டார் பிளேயருக்கு ஓய்வு?... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், அதிரடி வீரரான ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் இந்தியா வரும் இலங்கை அணி, மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. கவுகாத்தியில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. 7-ம் தேதி இந்தூரிலும், 10-ம் தேதி புனேயிலும் நடைபெறுகிறது. இந்த 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி பிசிசிஐ- யிடம், ரோகித் சர்மா கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகக் கோப்பைக்குப் பின்னர், சில தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது, பொறுப்பு கேப்டன் பதவியை ஏற்று ரோகித் சர்மா அணியை வழி நடத்தினார். ஓய்வே எடுக்காமல் விளையாடி வருவதால், ரோகித் சர்மாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. மாத கடைசியில் நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் தொடக்க ஆட்டக்காரராக தவான் மற்றும் கே.எல் ராகுல் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்?
- உடற்தகுதி விவகாரம்: டிராவிட்டை 'கோபப்படுத்திய' பும்ரா... திருப்பி அனுப்பியதற்கு 'காரணம்' இதுதான்?
- ‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’!.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’!
- 14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்னு தெரியுதா?
- அந்த ஆல்-ரவுண்டருக்கு 'இத்தனை' கோடியா?... என்ன ஒரு 'முட்டாள்தனம்'... பெங்களூர் அணிமீது காட்டம்!
- அந்த பையன் அவ்ளோ 'வொர்த்' இல்ல... பிரபல அணியை... கடுமையாக 'விமர்சித்த' முன்னாள் கேப்டன்!
- ‘எப்படியும் என் பவுலிங்க நீங்க சந்திச்சே ஆகணும்’!.. பிரபல வீரருக்கு கலக்கல் பதிலளித்த பும்ரா..!
- திடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன?
- மொத்தம் 85 கோடி... 'டாப் 10' வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே 'இந்தியர்' இவர்தான்!
- 10 கோடி, 15 கோடி... எக்கச்சக்கமாக 'வீரர்களின்' விலையை ஏற்றிவிட்டு... எஸ்கேப் ஆன அணி!