அசீம்கிட்ட பேசுறதே இல்ல.. அந்த துப்பாக்கி என் மேல திரும்பிடும்".. கமலிடம் ராபர்ட் 'பரபர' விளக்கம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் முழுக்க முழுக்க சண்டை மற்றும் சச்சரவுகள் தான் அரங்கேறி இருந்தது. தொடர்ந்து, வார இறுதியில் அனைத்து விதமான குழப்பங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை அளித்திருந்தார் கமல்ஹாசன்.

அசீம்கிட்ட பேசுறதே இல்ல.. அந்த துப்பாக்கி என் மேல திரும்பிடும்".. கமலிடம் ராபர்ட் 'பரபர' விளக்கம்!!
Advertising
>
Advertising

பொம்மை டாஸ்க்கில் ஷெரினாவை தனலட்சுமி தான் தள்ளி விட்டார் என அசீம் உள்ளிட்டோர் கூற, குறும்படம் போட்டு தனலட்சுமி மீது எந்த தவறும் இல்லை என்பதையும் உறுதி செய்திருந்தார் கமல்ஹாசன்.

அது மட்டுமில்லாமல், கடந்த வாரம் பல போட்டியாளர்கள் மத்தியில் அதிகம் கோபத்துடன் செயல்பட்டிருந்த அசீமையும் அதிகம் கண்டித்திருந்தார் கமல்ஹாசன். இப்படி கமல்ஹாசன் வந்த எபிசோடு பெரிய அளவில் ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. அதே போல, குயின்சியின் தலைமை பண்பை கமல் பாராட்டி இருந்த விஷயமும் அதிக வைரலாகி இருந்தது.
robert explains why he not speak with azeem in biggboss house

இந்த நிலையில், அசீம் குறித்து கமலிடம் ராபர்ட் மாஸ்டர் பேசி இருந்த விஷயங்கள், அதிக பரபரப்பை பார்வையாளர்கள் மத்தியில் உண்டு பண்ணி இருந்தது. தனக்கென சொந்தமாக யோசனை இல்லை என நீங்கள் நினைக்கும் நபர்களிடம் பேண்ட் ஒன்றை கொடுப்பது பற்றி கமல் கூற, தனது வாய்ப்பில் அதனை ராபர்ட் மாஸ்டரிடம் கொடுக்கிறார் அசீம்.

இதற்கு விளக்கம் சொல்லும் அவர், "ராபர்ட் மாஸ்டர் லைட்டா இருக்கிறார். ஆனா ஸ்விட்ச் அமுதவாணன் தான் போடுறாரு" என்கிறார். தொடர்ந்து பேசும் அமுதவாணன், "அவர வந்து சொல்லணும்னு அசீம் சொல்றாப்ல. இதுல லாஜிக்கே இல்லனு நான் யோசிக்கிறேன்" என்றார்.

இதன் பின்னர் பேசும் ராபர்ட் மாஸ்டர், "நாங்க எல்லாரும் பேசிகிட்டு தான் இருக்கோம். நான் முக்கியமா அசீம்ட்ட பேசுனது இல்ல. ஏன்னா அந்த துப்பாக்கி என் மேல திரும்பிடுமோன்னு பயமா இருந்திச்சு. நம்ம மேல திரும்புனா அசிங்கம் ஆயிடுமோன்னு சொல்லிட்டு, ஹாய் டார்லிங், எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா டார்லிங் என்று தான் அவரிடம் கேட்பேன்" என்கிறார்.

ராபர்ட் மாஸ்டரின் சுவிட்ச் அமுதவாணன் என அசீம் கூறியதும், இதற்கு ராபர்ட் மாஸ்டர் கொடுத்த விளக்கம் தொடர்பான விஷயமும், தற்போது பார்வையாளர்கள் கவனத்தை பெற்று வருகிறது.

ROBERT MASTER, AZEEM, AMUDHAVANAN, BIGGBBOSS TAMIL, BB6 TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்