Video: "பணம் எடுத்து கொடு தம்பி..!".. ATM-ஐ கொடுத்தவருக்கு ஆப்பு.. உதவுவது போல் ரூ. 30 லட்சம் அபேஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை: பணம் எடுத்து கொடு தம்பி என்று வந்த வயதான பெண்ணிடம் பணம் எடுத்து கொடுத்துவிட்டு  அவருக்கு உதவுவது போல் நடித்து ஏடிஎம்கார்டை அபேஸ் செய்ய முயன்றார். அவர் கையும் களவுவமாக பிடிப்பட்டதால் இப்போது போலீசிடம் சிக்கி கம்பி எண்ணுகிறார்.

Advertising
>
Advertising

ஒரு நபர், ஏடிஎம்இல் காசு எடுக்க தெரியாத வயதானவர்களிடம் கார்டு வாங்கி பின் நம்பர் எல்லாம் போட்டு, காசை எடுத்து தருகிறார். ஆனால் அவங்களோட ஒரிஜினல் கார்டுக்கு பதிலாக இவரு டம்மியாக நிறைய ஏடிஎம் கார்டுகளை பாக்கெட்டில் வைத்திருக்கிறார். அதில் இருநது அந்த பெண் வைத்திருப்பது போன்றே போலியா ஏடிஎம் கார்டை கையில் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இவர் அந்த ஒரிஜினல் கார்டு மூலம் அவரது வங்கி கணக்கில் உள்ள மற்ற பணத்தை எடுத்துவிடுவார்.  இதுதான் திட்டமாக இருந்திருக்கிறது. 

இவர் வகை வகையாக ஏடிஎம் கார்டுகளை தனது பாக்கெட்டில் வைத்திருக்கிறார். யாராவது உதவிக்குன்னு வந்தாட்டாங்க அப்படீன்னா என்ன கலர் ஏடிஎம் வைத்துள்ளார்கள் என்று பார்க்கிறார். இந்த பேங்கின் ஏடிஎம் கார்டா என்று பார்த்துவிட்டு, உதவி பண்ணுவது போல்உதவி பண்ணுவார். காசு எடுத்து கொடுக்கும் போது, ஏடிஎம் கார்டை மட்டும் மாற்றிவிடுவார்.  தேவகோட்டையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் பெயர் இப்ராகிம் என்று சொல்லப்படுகிறது. ஒரு பேங்கின் ஏடிஎம்மில் மோசடி செய்யும் போது, அங்க இருக்கிற சிசிடிவி காட்சிகள் இப்போது பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது,.

குறிப்பாக இவர்மோசடி செய்யகூடியதை அங்க பேங்கில் உள்ள ஆபிசர்கள் சிசிடிவி கேமரா  மூலம் நோட் பண்ணி, நேராக சென்று , யார் நீ, என்ன பண்ற, என்று கேட்டு மாஸ்கை கழட்டு, ஸ்டேசனுக்கு போகலாம் என்று அழைத்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். பல பேரை ஏமாற்றுபவர் ஒரு நாள் மாட்டித்தானே ஆக வேண்டும்.  இவர் இந்த மாதிரி ஏமாற்றி ஏமாற்றி, 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சி தெரியாதவர்கள்,  படிக்காதவர்கள், ஏடிஎம் கார்டை பற்றி தெரியாதவர்கள், பணம் எடுக்க உதவி செய்யும்படி அறியாமையால் உதவி கேட்கிறார்கள். அவர்களின் அறியாமையை பயன்படுத்தி நூதனமாக  மோசடி செய்து வந்திருக்கிறார் இப்ராஹிம். இதேபோன்ற மோசடியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

ATM THEFT, ATM ROBBERY, ATM, ஏடிஎம், ஏடிஎம் கொள்ளை, ஏடிஎம்மில் கொள்ளை, ஏடிஎம் திருடர்கள், ATM ROBBERY CCTV VIDEO, ATM THEFT VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்