'ஒரே புழுக்கமா இருக்கு'... 'மாடியில் தூங்க போன தம்பதி'... 'காருக்குள் இருந்த வீட்டு சாவி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாடியில் தூங்கப் போன தம்பதிக்குக் காலையில் வீட்டிற்குள் வந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை நங்கநல்லூர், 37வது தெருவில் வசித்து வருபவர் விவேகானந்தன். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 12 மணி அளவில் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு மாடியில் தூங்கலாம் எனச் சென்றனர். பூட்டிய சாவி ஒன்றை காரில் வைத்துவிட்டு விவேகானந்தன் மாடிக்குத் தூங்கச் சென்றுள்ளார்.

இதனிடையே அதிகாலை 6 மணியளவில் எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்டு விவேகானந்தன் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 35 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது. காரில் ஒரு சாவியை வீட்டின் உரிமையாளர் வைத்துவிட்டுச் சென்றதால் அந்த சாவியை எடுத்து திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. இது குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவுகளைப் பதிவு செய்து அருகில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். காரில் சாவி இருந்தது திருட வந்த நபருக்கு எப்படித் தெரிந்தது என்பது புதிராக உள்ளது. எனவே விவேகானந்தனை நன்கு அறிந்தவர்கள் யாரேனும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்