'விடாமல் துரத்திய நபர்கள்'.. 'கரும்புடன்.. குழந்தைபோல் பயந்து.. பிளிறியபடி பின்னாலேயே ஓடும் யானை!'.. நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி வாகனத்தில் சென்ற சிலர் யானையை துரத்திய சம்பவம் உலுக்க வைத்துள்ளது.

முதுமலை வனப்பகுதி நடுவே செல்லும் சாலைகளில் வாகனத்தை நிறுத்தவோ, விலங்குகளை துன்புறுத்தவோ கூடாது என கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் மசினக்குடியில் இருந்து உதகை சென்ற சுஜின் மற்றும் அவரது நண்பர்கள் சீகூர் பாலம் அருகே எதிரே வந்த ஒற்றை யானையை வாகனத்தில் இருந்தபடி விடாமல் துரத்தி கோபமூட்டினர். 

தும்பிக்கையில் கரும்புடன் இருந்த அந்த காட்டு யானையோ பயந்துகொண்டு பின்னாலேயே கொஞ்ச தூரம் சென்று, பின்னர் முழுதாக திரும்பி பிளிறியபடி அலறி ஓடுகிறது.
இந்த சம்பவத்தை அந்த அந்த வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். பார்க்க நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ வெளியானதை அடுத்து வனத்துறையினர், யானையை துரத்திய நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்