'நாளை சூரிய கிரகணம் எப்போது தெரியும்'?... 'வெறும் கண்களால் பார்க்கலாமா'?... விஞ்ஞானிகள் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்தால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என, விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ள நிலையில், அது வளையச் சூரிய கிரகணம் ஆகும். இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறும்போது, ''நாளை நிகழவிருப்பது முழு சூரிய கிரகணம் இல்லை. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்குத் தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவு பெறும்.
இதில் நண்பகல் 11.59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும். இருப்பினும் தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகண நிகழ்வைக் காண முடியும். மேலும் சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. பார்த்தால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கண்ணாடிகளை அணிந்தபடியே அதனைப் பார்க்க வேண்டும்'' என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும்...” "வரும் சூரிய கிரகணம் நமக்குத் திருப்பு முனையாக அமையும்" 'சென்னை' விஞ்ஞானியின் 'சுவாரஸ்யத் தகவல்...!'
- 'கிரகணம் இருக்கு'...'கொஞ்சம் பொறுத்துக்க ராசா'...'தாய் செய்த கொடுமை'...நடுங்க வைக்கும் வீடியோ!
- 'கோள்கள் இணைவதால் இந்த 'ராசி' காரர்களுக்கு ஆபத்தா'?...'அச்சத்தில் மக்கள்'...உண்மை என்ன ?