"மனைவி தன்னோட கணவனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கொடுமை இது".. விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட கருத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவி தன்னுடைய தாலியை தானே அகற்றுவது, கணவனுக்கு அளிக்கக்கூடிய அதிகபட்ச மனக்கொடுமை எனக்கூறி விவாகரத்து வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertising
>
Advertising

Also Read | கணவனை பிரிஞ்சு காதலனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண் எடுத்த விபரீத முடிவு.. வீட்டை செக் பண்ணப்போ சிக்கிய லெட்டர்.. உறைந்துபோன போலீசார்..!

ஈரோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர் சி.சிவகுமார். இவர் சிவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வி.எம்.வேலுமணி மற்றும் எஸ்.சௌந்தர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருமணம்

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பரில் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் 2011 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், தனது மனைவி தாலியை அகற்றிவிட்டதாகவும், தனக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் சிவகுமார் கடந்த 2016 ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்துக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்யவே, உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் சிவகுமார்.

அதிகபட்ச கொடுமை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்," மனைவியே தனது தாலியை அகற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெளிவாகியிருக்கிறது. இது கணவனுக்கு செய்யும் அதிகபட்ச மனக்கொடுமை என கருதலாம். மேலும், பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டையும் கூறி அவரை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக கருதலாம். இந்திய மரபில் கணவன் உயிருடன் இருக்கும்போது எந்த பெண்ணும் தாலியை கழற்ற தயங்குவார்" எனத் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து

மேலும், பிரிந்து வாழ்ந்த காலகட்டத்தில் மீண்டும் கணவருடன் இணைந்து வாழ பெண்மணி முயற்சி எடுக்கவில்லை என்பதை கருத்தில்கொண்டு விவாகரத்து வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய நீதிபதிகள்,"தாலியை கழற்றுவது திருமண முடிச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க போதுமானது என்று நாங்கள் ஒரு போதும் சொல்லவில்லை. அதேநேரத்தில் இணைந்துவாழ இருவருக்கும் விருப்பம் இல்லாததை இதன்மூலம் அறியமுடிகிறது" என்றனர். மேலும், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read | "அதை முதல்ல நிறுத்துங்க"... ட்விட்டர் CEO-க்கு வார்னிங் மெசேஜ் அனுப்பிய எலான் மஸ்க்.. என்ன ஆச்சு.?

REMOVAL OF MANGALSUTRA, WIFE, HUSBAND, COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்