'அச்சுறுத்தும் கொரோனா'... 'தயவு செஞ்சு இந்த மருந்தை நீங்களே எடுத்துக்காதீங்க'... சற்று ஆறுதலான செய்தியை சொன்ன சுகாதாரத்துறைச் செயலாளர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேசிய அளவில் 2,620 நபர்களும் தமிழக அளவில் 78 நபர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. தற்போது 95,048 பேர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48,289 பேர் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் சதவீதம் 50.8 ஆகும். கொரோனா கவனிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது 8.85 சதவீதம் ஆகும்.
24,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் சதவீதம் 25.8 விழுக்காடு ஆகும். புதிதாகத் தொற்று ஏற்பட்ட 13,000 நபர்கள் இன்று சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருவர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் போதுமான அளவில் படுக்கை வசதிகள் உள்ளன.படுக்கைகள் கிடைக்காது என்று யாரும் அச்சம் அடைய வேண்டாம் .
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் கசிவு வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சிக்கலான தருணங்களில் 108 அல்லது 0444- 6122300 என்று எண்களை அழையுங்கள். அதே போல 104 எண்ணையும் அழைக்கலாம். பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது.
ரெம்டிசிவிர் மருந்தை மக்கள் தாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் பரிந்துரைப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்'' எனக் கூறினார். இதற்கிடையே கொரோனா நிச்சயம் கட்டுக்குள் வந்துவிடும். எனவே மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அச்சுறுத்தும் கொரோனா'... 'இந்திய மக்களே பயப்படாதீங்க, கொஞ்சம் திரும்பி பாருங்க'... நெகிழ வைத்துள்ள பிரான்ஸ் அதிபர்!
- 'நாங்க எதாவது ஹெல்ப் பண்ணனுமா?... 'இதெல்லாம் பண்ண ரெடி'... கை கொடுக்க முன்வந்துள்ள சீனா!
- நானும் ரௌடி தான்...! 'என்னலாம் ஒண்ணும் பண்ண முடியாது...' - கூலிங் கிளாஸ் போட்டுட்டு போலீசாரிடம் தெனாவட்டாக பேசிய பெண்...!
- மன்னிச்சிடுங்க...! பார்சலுக்குள்ள 'என்ன இருக்குன்னு' தெரியாம திருடிட்டேன்...! பார்சல பிரிச்சு பார்த்தப்போ 'உள்மனசு' குத்திடுச்சு...! - நெகிழ வைத்த திருடன்...!
- நான் மறுபடியும் வரேன்...! கொரோனா 'அவருக்கு' சரி ஆயிடுச்சாம்...! 'மீண்டும் டெல்லி அணியில் இணையும் வீரர்...' 'ஆகா இனி தாரைதப்பட்டை கிழிய போகுது...' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!
- 'நண்பனின் மனைவி துடித்த அந்த காட்சி'...'தம்பி உன் மனசு இருக்கே'... 'ஆசை ஆசையாக வாங்கிய 22 லட்ச ரூபாய் காரை விற்ற இளைஞர்'... நெகிழ வைத்துள்ள சம்பவம்!
- என் காதலிய ரொம்ப மிஸ் பண்றேன்...! 'எப்படி நாங்க ரெண்டு பேரும் மீட் பண்றது...? 'போலீசாரிடம் கேட்ட இளைஞர்...' - போலீசார் கொடுத்த 'வேற லெவல்' பதில்...!
- தடுப்பூசி பாதுகாப்பானாது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலருக்கு மட்டுமே மீண்டும் நோய் தொற்று - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விளக்கம்..!
- 'ஐயோ, என்னோட மேக்கப் கலைஞ்சு போகும்'... 'மாஸ்க் போடாமல் அடம் பிடித்த இளம்பெண்'... காத்திருந்த ட்விஸ்ட்!
- 'மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்'... 'டிஸ்பி ஷில்பா'வை யாருன்னு தெரியுதா'?... 'அவரா இவர், அசந்து போன மக்கள்'... வைரலாகும் வீடியோ!