"கலெக்டர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டவரு.." காதல் தோல்வியால் வந்த சோதனை.. 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எம்பிஏ படித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி இருந்த நபரின் வாழ்க்கை, திடீரென தடம் புரண்டு, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertising
>
Advertising

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், கன்னியாகுமரி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், சுற்றித் திரிந்து வந்துள்ளார்.

இவர் கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அங்குள்ள நடைபாதை உள்ளிட்ட இடங்களிலும், நீண்ட சடை முடி மற்றும் அழுக்கு உடையுடன் வலம் வந்துள்ளார். அப்பகுதி மக்கள் அளிக்கும் உணவையும் உண்டு காலம் கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, சமீபத்தில் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற பகுதியில் இருந்து முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அந்த சமயத்தில் மனநிலம் பாதிக்கப்பட்ட வாலிபரை பார்த்ததும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது உறவினராக இருக்க கூடும் என்ற சந்தேகம் முருகனுக்கு எழுந்துள்ளது.

சந்தேகத்தின் பெயரில், அந்த வாலிபரிடம் முருகன் சென்று பேச்சு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில், முருகனின் சந்தேகம் வலுக்கவே, அங்கே நின்ற போலீசாரின் உதவியுடன் அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த வாலிபருக்கு முடித்த திருத்தும் செய்து, குளிக்க வைத்து புத்தாடையும் உடுத்தி உள்ளனர். தொடர்ந்து, தென்மலையில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவலும் கொடுத்துள்ளார் முருகன்.

அப்போது தான், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் குறித்து ஏராளமான தகவல் தெரிய வந்தது. B. Com மற்றும் MBA படித்துள்ள அந்த நபரின் பெயர் முத்து ஆகும். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தன் தங்கியிருந்த விடுதியில் இருந்து திடீரென காணாமலும் போயுள்ளார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. பல்வேறு முயற்சிகள் செய்தும் முத்துவை கண்டுபிடிக்க முடியாமல் அந்த முயற்சியையே உறவினர்கள் கைவிட்டனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திடீரென மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் முத்து இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர், உடனடியாக கன்னியாகுமாரிக்கும் அவரது உறவினர்கள் கிளம்பி வந்தனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் தக்க முறையில் விசாரித்து, முத்துவை அனுப்பி வைத்தனர்.

MBA பட்டதாரியாக இருந்த முத்து, சென்னையில் பணிபுரிந்த போது ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், சென்னையில் இருக்கும் போது, உடன் பயின்ற பெண்ணை காதலித்ததாகவும் அந்த காதல் கை கூடாத காரணத்தினால், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நடந்தே முத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காதல் தோல்வி காதல் கை கூடாத காரணத்தினால், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தாருடன் இணைந்துள்ள தகவல், பலரையும் நெகிழ வைத்துள்ளது.

COLLECTOR, KANYAKUMARI, IAS, CHENNAI, LOVE FAILURE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்