'பல மணி நேரம் தொடர்ந்து வலியால் துடித்தனர்!' 'சாத்தான்குளம்' சம்பவம் குறித்து 'குமுறும் உறவினர்கள்...' 'திடுக்கிடும் தகவல்கள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடை திறந்ததற்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களில் முதலில் தந்தை ஜெயராஜூம்  பிறகு அவரது மகன் பென்னிக்சும் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆங்கில இணையதளம் ஒன்று தந்தை மகன் இறப்பு குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயராஜின் உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளதாவது '' ஜூன் 20- ந் தேதி தந்தையும் மகனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலிருந்து அவர்களின் ஆசனவாயில் ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருந்தது. காலை 7 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் அவர்களுக்கு 7 முறை லுங்கிகளை மாற்றப்பட்டது. தொடர்ந்து ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருந்ததால், அவர்கள் அணிந்த லுங்கிகள் ஈரமாகிக் கொண்டே இருந்தன. கடுமையாக வலிப்பதாக அவர்கள் எங்களிடத்தில் கூறினர்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "சிறையிலிருந்து அவர்கள் நீதிபதியிடத்தில் அழைத்து செல்லப்பட்டனர். போலீஸாரின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியிடத்தில் அவர்கள் உண்மையை சொல்லத் தயங்கினர். போலீஸ் நிலையத்தில் அவர்கள் இருந்த போது தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் அவர்கள் வலியால் கத்தும் சத்தம் எங்களுக்கு கேட்டது. இரவு முழுவதும் அவர்கள் உதவி கேட்டனர். போலீஸ் நிலையத்திலிந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் உள்ளவர்களும் தந்தையும் மகனும் கத்துவதை கேட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்