அரசு பேருந்துகள் நிற்குமிடத்தில் உள்ள ஹோட்டல்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்யவேண்டும்.. வெளிவந்த புதிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகங்களில் நிறுத்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவை வெளியிட்டுள்ளன.

Advertising
>
Advertising

தமிழகத்திற்குள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் நெடுந்தூர பேருந்து சேவைகளின் போது பயணத்திற்கு இடையே உணவகங்களில் பேருந்து நிற்பது வழக்கம். இதில் பொதுமக்கள் பல சிரமங்களை சந்தித்துவருவதாக புகார்கள் எழுந்த நிலையில், தமிழகம் முழுவதும் இயங்கிவரும் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பேருந்துகள் நிற்கும் உணவகங்களுக்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும், அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ உணவுகள் மட்டுமே


தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே தயார் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் விலை பட்டியல் கண்டிப்பாக இருத்தல் வேண்டும் எனவும் MRP ஐ விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் அந்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள் தரமானதாகவும் சுவை உடையதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுகாதாரம்

உணவக வளாகம் அமைந்திருக்கும் இடங்களில் கழிப்பிட வசதிகள் தூய்மையுடன் இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிப்பிட சேவைகள் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும், பையோ கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மின் இணைப்பு

உணவகத்தில் மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும். பயணிகள் வாங்கும் பொருட்களுக்கு கம்யூட்டர் பில் வழங்கப்பட வேண்டும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMILNADU, GOVERNMENTBUS, TNSTC, VEGFOOD, தமிழ்நாடு, அரசுபேருந்து, உணவகம், சைவஉணவு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்