அந்த ஊருக்கெல்லாம் பொண்ணு தரமாட்டோம்.. கிட்டத்தட்ட 50 பேரு 45 வயசாகியும் திருமணம் ஆகாம இருக்காங்க.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி: ஆண்களுக்கு திருமணத்திற்கு  பெண்களை தர மறுக்கும் கிராமம் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.

Advertising
>
Advertising

நான் ஐபோன் தான் ஆர்டர் பண்ணினேன்.. ஆனா வந்தது அது இல்ல.. வந்த பொருளை நினைத்து 7 நாளா மன வருத்தத்தில் இருக்கும் பெண்

ஆற்றை கடக்க வேண்டும்:

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி  மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடைக்கோடி எல்லையில் அமைந்துள்ளது தெங்குமரஹடா கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் 32 கிமீ தூரம் கரடுமுரடான பாதையில் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும், அவ்வாறு சென்றாலும் கிராமத்திற்குள் நுழைய சுமார் 500 மீட்டர் தூரம் மாயாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டும், அவ்வாறு கடந்து சென்றால் அங்கு உள்ள கிராமம் தான் தெங்குமரஹடா கிராமம்.

பரிசல் பயணம்:

இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இயற்கையோடு இயற்கையாக 50 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு நீலகிரியில் இருந்து செல்ல கோத்தகிரியில் இருந்து ஒரே ஒரு அரசு பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் செல்கிறது. இந்த பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் அந்த கிராம மக்கள், தங்களது வீட்டிற்கு செல்ல மாயார் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவலம் உள்ளது.

இளைஞர்களுக்கு பெண் கொடுக்க தயக்கம்:

இந்த கிராமத்தில் இருந்து இளைஞர்கள் திருமணம் மேற்கொள்ள வேற ஊருக்கு சென்று பெண்களை பார்த்து வந்தாள் மணமகனை பெண் வீட்டிற்கு மிகவும் பிடிக்கும் திருமணம் மேற்கொள்ள பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு  வர தெங்குமரஹாடா  சாலையில் உள்ள 32 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் பெண் வீட்டார் உடனடியாக திருமணத்தை ரத்து செய்து சென்றுவிடுவார்கள். 32 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான சாலையில் பயணம் மேற்கொள்வதும், 500 மீட்டர் முதலைகள் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதை இங்கு உள்ள இளைஞர்களுக்கு பெண் தர மக்கள் தயக்கம் காட்டுவதால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 45 வயதை கடந்து இன்னும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகின்றனர்.

பசுமையான கிராமத்தில் உள்ள கன்னிப் பெண்கள் திருமணம் ஆகி வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் தெங்குமஹாடா கிராமத்திலுள்ள இளைஞர்கள் பலருக்கு திருமணம் என்பது எட்டாக்கனியாக உள்ளது. எனவே பசுமை நிறைந்த இந்த கிராமத்திற்கு சாலை மற்றும் பாலம் அமைத்து தந்தாள் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திருமணம் போன்ற அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

அந்த கார்ல லிஃப்ட் கேட்டு பாப்போம்.. ஐயோ மேடம் நீங்களா? எவ்ளோ பெரிய ஆளு நீங்க.. காரில் ஏறியவுடன் துள்ளி குதித்த பெண்கள்

REFUSAL, WOMEN, MARRIAGE, NILGIRIS VILLAGE, திருமணம், நீலகிரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்