"நாடு முழுவதும் இந்த திட்டம் சட்டமாகணும்" திருமண விழாவில் விருப்பத்தை உடைத்து சொன்ன முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று நடைபெற்ற, எம்பி தமிழச்சி தங்கப் பாண்டியன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமணங்களை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
திருமணம்
தென்சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் ஐ.ஜி. சந்திரசேகர் ஆகியோரது மகள் டாக்டர் நித்திலாவுக்கும், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் டாக்டர் ஆர்.மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தன் மகேந்திரனுக்கும் இன்று காலை திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
இந்த திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனி மொழி எம்.பி., எ.வ. வேலு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், டி.கே. எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆ.ராசா மற்றும் ஏராளமான அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சீர்திருத்த திருமணம்
திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம், இதனைச் சீர்திருத்தத் திருமணம் என்று சொல்லக்கூடாது. இப்போது இதை திராவிடத் திருமணம் என்றே சொல்லலாம். ஏனென்றால் திராவிட மாடலில்தான் நம்முடைய ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எனவே இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று முதன்முதலில் தமிழகத்தில் அண்ணா தலைமையில் 1967-ல் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார்கள்" என்றார்.
தற்போது இந்தத் திட்டம் தமிழகம் முழுமையும் பரவி வருவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், இந்தியா முழுமைக்கும் இந்த திட்டத்தினை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார்.
எம்பிக்களுக்கு கோரிக்கை
தமிழகத்தில் இருப்பதைப்போல இந்தியா முழுமையும் சீர்திருத்த திருமணங்கள் நடைபெறுவதை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்பதே முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் விருப்பம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின் அங்கு குழுமி இருந்த எம்பிக்களுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,"இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எவ்வாறு தமிழகத்தில் இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்ற நிலை இருக்கிறதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் இந்தத் திருத்ததை கொண்டுவர, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும்" என்றார்.
தமிழச்சி தங்கப் பாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சீர்திருத்த திருமணங்களை இந்தியா முழுமைக்கும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என பேசியது தமிழகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
மாட்டுக் கொட்டகையில் கேட்ட அலறல் சத்தம்.. பதறியடித்து ஓடி வந்த மாமா.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி..!
தொடர்புடைய செய்திகள்
- "மூணு பேரும் சேர்ந்து Propose பண்ணாங்க.. ஓகே சொன்னதுக்கு காரணம் இது தான்.." ஒரே நேரத்தில் மூன்று பெண்களை மணந்த நபர்
- VIDEO: முதல்வர் ஸ்டாலின் சென்ற சாலையில்.. டம்ளரை வீசிய டீ மாஸ்டர்.. பரபரப்பு வீடியோ..!
- தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த பெண்.. மருத்துவமனையில் மாப்பிள்ளை வீட்டாருக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'
- “எங்க ஊர்ல கல்யாணம் பண்ணா..1.67 லட்சம் தர்றோம்"... வித்தியாச ஆஃபரை அறிவித்த நகரம்..!
- ஒரு நாள் முன்னாடி நடந்த திருமணம்.. நூலிழையில் உயிர் தப்பிய இந்திய மாப்பிள்ளை.. சுவாரஸ்ய பின்னணி
- "நான் ஏன் தமிழன்?"... முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியிட்டு விழாவில் ராகுல்காந்தி உணர்ச்சி பொங்க பேச்சு..!
- வீட்டை காலி பண்ண சொன்ன ஓனர்.. சிறுவன் அப்துல் கலாமுக்கு.. முதல்வரிடம் இருந்து வந்த சூப்பர் சர்ப்ரைஸ்!
- அதெப்படி இன்னொருத்தர் கூட நிச்சயம் பண்ணலாம்.. பக்கத்துவீட்டுக்காரரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கடைசியில் நடந்த சோகம்..!
- என் வாழ்க்கை சந்தோஷமா இல்லம்மா.. திருமணம் நடந்து ஒரு மாசம் கூட முடியல.. மகள் எடுத்த முடிவினால் உடைந்து நொறுங்கிய பெற்றோர்
- பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்