சென்னைக்கு 'ரெட் அலர்ட்'டா...? ரொம்ப 'ஜாக்கிரதையா' இருக்க வேண்டிய நேரம் இது...! - வெளியாகியுள்ள புதிய எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கனமழை நீடித்து வருவதால் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertising
>
Advertising

சென்னை மற்றுமின்றி புற நகர்களான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், குரோம்பேட்டை தாம்பரம், வண்டலூர், திருமழிசை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்து வருகிறது. வடசென்னை பகுதிகளிலும் தீவிரமாக பேய் மழை பெய்து வருகிறது.

தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்புகள் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது.

ஏரிகளில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே நீர்நிலைகள் அருகே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் மண்ணால் பூசப்பட்ட பழைய வீடுகளில் இருப்பவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் ஆகும்.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரைக்கும் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அப்படி இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் சென்னை வாழ் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது பெய்த மழைக்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

RED ALERT, CHENNAI, RAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்