தமிழகத்தில் ரெட் அலெர்ட்.. நாளைக்கும் இந்த மாவட்டங்கள்ல கனமழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

Advertising
>
Advertising

Also Read | "என்னை கேக்காம ஏன் வெள்ளைப்பூண்ட Cut பண்ண.?".. கோபத்துல கணவன் செஞ்ச காரியம்.. உறைந்த உறவினர்கள்.. நீதிமன்றம் அதிரடி..!

தென் மேற்கு பருவமழை

ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தற்போது அதிகரித்திருக்கிறது.

ரெட் அலெர்ட்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக  இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும். கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் உட்பட இந்தியாவின் தெற்கு தீபகற்பத்தில் இந்த வாரம் மிக கனமழை நீடிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை படை அங்கே முகாமிட்டிருக்கிறது. இந்நிலையில், மக்கள் கவனத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில்

இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.கோயம்பேடு, ராயப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Also Read | ஆளே இல்லாத மர்ம தீவுல எடுக்கப்பட்ட புகைப்படம்.. அதுல மங்கலா தெரிஞ்ச உருவம்.. உலக அளவில் வைரலான புகைப்படம்..!

HEAVYRAIN, RED ALERT, TAMILNADU DISTRICTS, வானிலை ஆய்வு மையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்