குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஏன்.? பட்ஜெட்டில் நிதியமைச்சர் விளக்கம்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதில் சிறப்பம்சங்களாக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் , அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது, சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படுவது, நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு, வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம், தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு, போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு, இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதேபோல், சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படுவது, தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படுவது, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ₹40 கோடி ஒதுக்கீடு, தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு, இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படுவது உள்ளிட்ட அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
இதன் ஒரு முக்கிய அம்சமாக 'மகளிர் உரிமைத்தொகை' வழங்கப்படும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி, மகளிர் உரிமைத்தொகை' வழங்கப்படுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 (ஆயிரம் ரூபாய்) ரொக்கப் பணமானது, வரும் நிதியாண்டும் முதல் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவி
மேலும் இதற்கான காரணத்தை விளக்கிய நிதியமைச்சர், ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை மற்றும் விலைவாசி உயர்வால் குடும்பச் செலவுகளை சமாளிக்கமுடியாமல் தவிக்கும் குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் பேருதவியாக இருக்கும் என்றும், இந்தத் திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல், தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றும் இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read | தமிழ்நாடு : குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹ 1000.. எப்போ இருந்து? வெளியான பட்ஜெட்.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers .. பொம்மன், பெள்ளியை நேரில் பாராட்டிய முதல்வர்...! யானைகள் முகாமை சேர்ந்த 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அறிவிப்பு!
- "MGR ரசிகரா?.. சிவாஜி ரசிகரா?".. கோபிநாத்தின் கேள்விக்கு முதல்வர் MK ஸ்டாலினின் அசத்தல் பதில்.. Exclusive!!
- "அண்ணன் BIKE ஓட்ட சொல்லி கொடுத்தாரு.. கீழ விழுந்து 2 பேருக்கும் Fracture" - அழகிரி-யுடனான பால்ய நினைவுகள்..! முதல்வர் ஸ்டாலின் Exclusive
- புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்.. முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல்.!
- “உதயா வந்து சொன்னதும்” .. LOVE MARRIAGE-னாலே கிரீன் சிக்னல்.. முதல்வர் ஸ்டாலின் சொல்லும் சீக்ரெட்ஸ்..! EXCLUSIVE VIDEO
- “ஹேப்பி பர்த்டே தாத்தானு சொல்லி.. அக்கறையுடன் ஃப்ரைடு ரைஸ் கொடுத்து..” - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
- “பெரும் உயிரிழப்புகள், அழிவுகள் வேதனை அளிக்கிறது” - துருக்கி நிலநடுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்.!
- ENGLISH-ல சரவெடி பேச்சு.. அசத்திய அரசு பள்ளி மாணவன்.. முதல்வர் முக.ஸ்டாலின் கொடுத்த விருது.. வீடியோ..!
- "ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. வென்று காட்டுவோம் EVKS".. திமுக தலைவர் CM மு.க. ஸ்டாலினை டேக் செய்து கமல்ஹாசன் ட்வீட்!
- "வாரிசு அரசியல்னு சொல்லுவாங்க.. ஆனா..".. அமைச்சர் உதயநிதி பரபரப்பு விளக்கம்..