செம பயம்..'பழைய' பேப்பருக்குள்ள 'ஒளிச்சு' வச்ச '16 பவுன்' நகை.. மறந்து போய் இப்படியா பண்றது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள மசக்காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரின் மனைவி கலாதேவி. இவர் தன்னிடம் இருந்த நகைகளை திருடர்களுக்கு பயந்து பழைய பேப்பர்களுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கிறார்.
திருடர்களுக்கு பயந்து 16 பவுன் நகைகள், வைரத்தோடு என மொத்தம் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கலாதேவி மறைத்து வைத்திருந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று சேலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பழைய பேப்பர் வாங்க வந்துள்ளார். நகைகளை வைத்தது மறந்து போய் கலாதேவி பேப்பர்களை எடை போட்டுவிட்டார்.
தொடர்ந்து நகைகள் குறித்த ஞாபகம் வந்தவுடன் ராசிபுரம் காவல்நிலையத்தில் கலாதேவி புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் சேலம் சென்று செல்வராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் நகைகள் இருந்தது உண்மை தான், யாருடையது என தெரியாததால் நகைகளை எடுத்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அந்த நகைகளை சரிபார்த்து கலாதேவியிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக நடந்து கொண்ட செல்வராஜ்க்கு கலாதேவி ரூபாய் 10 ஆயிரம் பணத்தை அன்பளிப்பாக அளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை: 'குப்பை லாரி மோதியதில்'.. 'நசுங்கிய உடல்!'.. நள்ளிரவில் காவலருக்கு அரங்கேறிய சோகம்!
- 'நாய் குறுக்கே வந்ததால்'... 'பைக்கில் சென்ற காவலருக்கு'... 'நொடியில் நிகழ்ந்த பரிதாபம்'!
- 'சைரன் வெச்ச வண்டி... வாக்கிடாக்கினு கெத்தா இருந்தியே தல!' .. அதிரவைத்த சம்பவம்!
- தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!
- ‘முன்பணம் 5 லட்சம்’.. ‘பாக்கி பணம் இன்னும் தரல’! டவரில் ஏறி சுருக்கு கயிறு மாட்டிய முதியவர்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
- ‘ஆசையா மோர் கொடுத்த மனைவி’.. ‘சுருண்டு விழுந்த கணவன்’ திருமணமான 9-வது நாளில் புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை..!
- 'உங்க ATM கார்டை புதுப்பிக்கணும்.. OTP நம்பரை சொல்லுங்கே!'.. 'போலீஸ்காரரையே ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் அபேஸ்!'.. பரபரப்பு சம்பவம்!
- 'அப்ப எதுக்கு லவ் மட்டும் பண்ண?'.. திருமணத்துக்கு மறுத்த காதலி.. ஆத்திரத்தில் காதலன் கொடுத்த கொடூர தண்டனை!
- 'ஹெட் ஆபீஸ்'ல இருந்து பேங்க் மேனேஜர் பேசுறேன் சார்'...'உங்க கார்டுல 16 நம்பர்'...இந்த குரல் நியாபகம் இருக்கா?