"இதோ இந்த பாம்புதான் என்ன கடிச்சது".. பிளாஸ்டிக் டப்பாவிற்குள் பாம்பு.. அரசு மருத்துவமனையை அதிரவைத்த பெண்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன், பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும். இதுவே, பாம்பு ஒருவருடைய உடல் மீது ஏறினால் சொல்லவே வேண்டாம். மிகப்பெரிய களேபரமே நடந்துவிடும். ஆனால் உயிர் பயம் என்பது வந்துவிட்டால் எவ்வித பயத்தையும் எதிர்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது.

அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் இருவரும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரேவதி தனது கணவருடன் தென்னை மர தோப்பிற்கு வேலைக்காக சென்றிருக்கிறார். அப்போது, அவரை கட்டு விரியன் பாம்பு கடித்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி உடனடியாக இதுகுறித்து தனது கணவரிடத்தில் சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து, ரேவதியை கடித்த பாம்பை கச்சிதமாக பிடித்து அங்கு கிடந்த பிளாஸ்டிக் குடுவை ஒன்றினுள் போட்டிருக்கிறார் அவரது கணவரான சக்திவேல். தொடர்ந்து தனது மனைவியை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவர். அப்போது, தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டும் நோக்கில் கொண்டுவந்திருப்பதாக ரேவதி கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து ரேவதிக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக அவர் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

ராசிபுரத்தில், தன்னை கடித்த பாம்புடன் பெண் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

SNAKE, HOSPITAL, RASIPURAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்