VIDEO: 'கொஞ்சும் தமிழ்... அழகு சேஷ்டை... ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ராஷ்மிகா'... வேற லெவல் ஹிட் அடித்து... Top trending-ல் வீடியோ! - Don't miss!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

Behindwoods Gold Medals விழாவில் நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்குபெற்ற Ramp Walk வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய திரைத்துறையில் உள்ள பல்வேறு ஆளுமைகளையும், அவர்களது திறமைகளையும் அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் Behindwoods சார்பாக பிரம்மாண்ட விருது வழங்கும் விழா கொண்டாடப்படும்.

அந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டு, Behindwoods நடத்திய Behindwoods Gold Medals விழாவில் திரைத்துறையை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது Dear Comrade படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு Best Actor Critics Choice - Female - Telugu என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அந்த விருதை வழங்க, நடிகை ராஷ்மிகா அதனை பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய நடிகை ராஷ்மிகா, தனக்கு தமிழ் தெளிவாக பேசத் தெரியாது என்பதை தட்டுத்தடுமாறி சொன்னார். அவருக்கு அது இயல்பாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. திக்கித் திக்கி அவர் பேசும் தமிழ் அவ்வளவு க்யூட்.

               

மேலும், தனது திரைப்படங்களில் அவர் செய்த பாவணைகளை விழா மேடையில் LIVE-ஆக செய்து காட்டும் போது அரங்கம் அதிர்ந்தது. ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

                   

                   

அதைத் தொடந்து, கீதா கோவிந்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற Yenti Yenti பாடலுக்கு, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா செய்த Ramp Walk ரசிகர்களின் உள்ளங்களை வென்றதோடு, இந்த வீடியோ அதிகளவில் வைரல் ஆனது.

கடந்த 2019ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி Behindwoods TV-யில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது 50 மில்லியன் (5 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது. தென்னிந்திய விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, இத்தகைய பிரம்மாண்ட வெற்றியை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்