திணுசு திணுசா கடத்துறாங்கப்பா... சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை உயிரினங்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மலேசியாவுக்குக் கடத்தப்பட இருந்த அரிய வகை கடல் உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.

Advertising
>
Advertising

சென்னை மீனம்பாக்கம் சரக்கு விமானங்கள் நிலையத்தில் பன்னாட்டு பிரிவில் மலேசியா செல்வதற்காக சரக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வழக்கமான சோதனைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அப்போது மலேசியா செல்ல இருக்கும் பெட்டிகளில் நண்டுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

கடல் நண்டுகள் இருப்பதாகக் கூறப்பட்ட 13 பெட்டிகளையும் திடீரென சோதனை செய்ய விமான நிலைய சுங்கவரித்துறை அதிகாரிகள் முற்பட்டனர். அப்போது கடல் நண்டுகள் கூடவே சுமார் 7 பெட்டிகளில் அரியவகை கடல் உயிரினமான நட்சத்திர ஆமைகள் நிறைய இருந்துள்ளன. இந்த நட்சத்திர ஆமைகள் மலேசியாவுக்குக் கடத்தப்பட இருந்துள்ளது.

கடல் வாழ் உயிரினமான நட்சத்திர ஆமைகள் அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயிரினம் ஆகும். அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டே இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கும். இந்த அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் எந்தவொரு உயிரினத்தையும் வணிக ரீதியாகப் பயன்படுத்துவது குற்றம் ஆகும். அதிலும் ஏற்றுமதி செய்வது மிகப்பெரிய குற்றம் ஆகும்.

7 பெட்டிகளில் நிறைந்து காணப்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து கைப்பற்றினர். இந்த நட்சத்திர ஆமைகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு வனத்துறையிடம் முறையாக கொடுக்கப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHENNAIAIRPORT, சென்னை, சென்னை விமான நிலையம், அரியவகை உயிரினங்கள், CHENNAI AIRPORT, RARE SEA ANIMALS, MALAYSIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்