"பிரம்ம கமலம் பூ".. பேர கேட்டாலே அதிருதுல்ல.. வருஷத்துக்கு ஒரு டைம் பூக்கும் அரிய பூ.. தமிழகத்தில் குவிந்த சுற்றுலாவாசிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய அதிசய பிரம்ம கமலம் பூ தற்போது கொடைக்கானலில் பூத்துள்ளது. இதனை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.
பிரம்ம கமலம்
தென்னமெரிக்க நாடான மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட இந்த பூ, இந்தியாவில் பொதுவாக இமயமலை பகுதிகளில் அதிக அளவில் விலையும். இந்த அபூர்வ பிரம்ம கமலம் பூ இரவில் பூத்து அதிகாலையில் வாடிவிடும் தன்மை கொண்டது. இந்து கடவுளான பிரம்மனின் நாடிக் கொடி என இதை மக்கள் இதனை கருதுகின்றனர். இந்து சமயம் மட்டுமல்லாது பல மதங்களிலும் இந்த அதிசய பூ மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
உதாரணமாக இலங்கையில் இதனை 'சொர்க்கத்தின் பூ' என்று அழைக்கிறார்கள். புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் இந்த பூ வடிவத்தில் பூமிக்கு வருவதாக அந்த மக்கள் நம்புகின்றனர். அதேபோல ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த பூவை குறித்து இன்னொரு சுவாரசியமான கருத்தும் உள்ளது. இயேசு பிறந்த போது அவரை காண வந்த மூன்று ஞானிகளுக்கு நட்சத்திரங்கள் வழி காட்டியதாக சொல்லப்படுவதுண்டு. இந்த பூவை மக்கள் நட்சத்திரங்களின் குறியீடாக கருதுகின்றனர்.
நினைத்ததை நிறைவேற்றும்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த பிரம்ம கமலம் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பூவின் உள்ளே படைப்புக் கடவுளான பிரம்மா இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் அதன் இதழ்களை நாகம் என்றும் மக்கள் வழிபடுகின்றனர். இரவில் பூத்து நன்கு மணம் வீசக் கூடிய இந்த பூவை மக்கள் போற்றுவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது இந்தப்பூ பூக்கும் வேளையில் பிரம்மாவை நினைத்து மனதில் நினைத்துக் கொண்ட விஷயங்கள் நிறைவேறும் என மக்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாகவே பலரும் தங்களது வீட்டில் இந்த அதிசய செடியை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாவாசிகள்
இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய மலை வாசஸ்தலமான கொடைக்கானலில் இந்த அரிய பிரம்ம கமலம் பூ தற்போது பூத்துள்ளது. அங்குள்ள பிரையண்ட் பூங்காவில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மூன்று வகையான பிரம்ம கமலம் செடிகள் நடப்பட்டன. இந்நிலையில் அந்த செடியில் இருந்து தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பூங்காவிற்கு சென்று வருகின்றனர்.
இந்த பூங்கா நிர்வாகி ஒருவர் இதுகுறித்து கூறுகையில் "ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பிரம்மாவிற்கு உரியது என நம்பபடுகிறது. தற்போது பூத்துள்ள இந்த பிரம்ம கமலம் பூ ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும். இது இரவில் நன்றாக மணம் வீச கூடியது. இங்கு மூன்று வகையான பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது" என்றார்.
அரியவகை பூவான பிரம்ம கமலம் கொடைக்கானலில் பூத்திருப்பது அங்கு செல்லும் சுற்றுலா வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
டுவிட்டர் ஓனராக எலான் மஸ்க் பதிவிட்ட ‘முதல்’ ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘செம’ வைரல்..!
தொடர்புடைய செய்திகள்
- ”புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” பாட்டுக்கு ஏத்தமாறி செம்ம கிளைமெட் - வேற எங்க இங்கதான்!!...
- ‘பேராசிரியர் பண்ற வேலையா இது’.. மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில் வந்த போட்டோ.. கல்லூரி நிர்வாகம் எடுத்து அதிரடி ஆக்ஷன்..!
- கட்டுக்கட்டா பணத்துடன் 'பார்க்'கில் சுற்றி வந்த இளைஞர்...! இவ்ளோ பணம் 'எப்படிங்க' உங்க கையில வந்துச்சு...? - அதிர்ச்சி சம்பவம்...!
- "உங்களுக்கு ஒரு விருது தரோம்"... 'ஸ்கெட்ச் போட்டு சென்னை தொழிலதிபரை தூக்கிய கும்பல்'... 'கடைசியில் பெரிய டிவிஸ்ட் கொடுத்து'... 'ஓடவிட்ட போலீசார்!!!'
- நடிகர்கள் விமல், ’பரோட்டா’ சூரி மீது ’போலீசார்’ வழக்கு பதிவு - என்ன நடந்தது?
- நோய் 'எதிர்ப்பு' சக்தி ரொம்பவே அதிகம்... போட்டிபோட்டு 'வாங்கி' செல்லும் வெளிநாட்டினர்!
- ‘கொடைக்கானலில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ...’ ‘மூலிகை செடி, மரங்கள் அனைத்தும் சாம்பல்...’ பரிதாபத்தில் வாயில்லா ஜீவன்கள்...!
- ‘டூர் போன சென்னை இளைஞர்கள்’.. ‘திடீரென அறுந்து விழுந்த ராட்டினம்’.. பிரபல பூங்காவில் நடந்த விபத்து..!
- ஆசை வார்த்தையால்... 11-ம் வகுப்பு மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த துயரம்... அதிர்ச்சியான பெற்றோர்!
- ‘வேறொரு’ வழக்கை விசாரிக்கும்போது... தானாக ‘உளறி’ மாட்டிக் கொண்ட கொலையாளி... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்’...