'மாணவனின் ஓட்ட டவுசர்'... 'கலங்கிய சூர்யாவின் மனதை மாற்றிய தருணம்'... நெகிழ வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பை தாண்டி விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத வாழ்க்கைச் சூழலில் இருக்கும் மாணவர்களை அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட சமூக நலப்பணியாற்றி வருகிறார் நடிகர் சூர்யா.
இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு , உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், குடும்ப சூழ்நிலையையும் மிகவும் உணர்வு பூர்வமாக பேசினார்.
இதனை பார்த்து கொண்டிருந்த நடிகர் சூர்யா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். பின்னர் பேச்சை முடித்து திரும்பிய மாணவியை தட்டி கொடுத்து தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ செய்தது. இதனிடையே மேடையில் நடந்த சம்பவங்கள் குறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் 'Behindwoods'க்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அகரம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ''மாணவி காயத்திரி பேசும் போது சூர்யா மட்டுமல்ல. அங்கிருந்த அனைவரும் கலங்கி விட்டார்கள். அகரம் என்பது சூர்யாவின் மனதில் உதித்த விதையாகும். அதற்கு ஒரு சம்பவத்தையும் ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ் நினைவு கூர்ந்தார். சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார், வருடந்தோறும் எஸ்.எஸ்.எல்சி தேர்வில், ஏழ்மையான குடும்ப சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதன்படி எஸ்.எஸ்.எல்சி தேர்வு முடிவுகள் வந்த பிறகு நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் மாணவர் ஒருவர் ஓட்டை விழுந்த டவுசரோடு மேடை ஏறி 25,000 ரூபாயை பெறுவதற்காக வந்தார். அப்போது அந்த மாணவர் நடிகர் சிவகுமாரிடம்ம், ''நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கு எனக்கு ஏற்கனவே நல்ல தொகை கிடைத்து விட்டது. ஆனால் என்னை போல பல மாணவர்கள் சரியான உடை கூட உடுத்த முடியாமல், மிகவும் சிரமத்தோடு படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த 25,000 ரூபாயை கொடுக்க முடியுமா? என மேடையிலேயே கேட்டார்.
இதனை கவனித்து கொண்டிருந்த நடிகர் சூர்யா, தான் கஷ்டப்படும் நிலையிலும் மற்ற மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று அந்த மாணவன் நினைக்கும் போது, நாம் ஏன் இன்னும் பல உதவிகளை செய்ய கூடாது என அவர் எண்ணிய நேரத்தில் தான் அகரம் அறக்கட்டளை உருவானது'' என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ் சார்பில் அகரம் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் வருடந்தோறும் இதுபோன்ற உதவிகள் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- படத்துல ‘ஹீரோயின்’ ஆக்கறேன்னு சொன்னாரு... ‘சென்னை’ கொலையில் பெண்ணின் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- இந்த 'அதிமுகவுக்கு' அர்த்தம் 'அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்'.. 'ஜெயிக்க வைங்க!'.. பரபரப்பு போஸ்டர்!
- ‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..
- ‘நடிகர் விஜய்சேதுபதிக்கு’... ‘எதிரான வணிகர்கள் போராட்டம்’... ‘மண்டி ஆன்லைன் நிறுவனம் விளக்கம்’!
- 'அசுரவேகத்தில் வந்த'.. 'சின்னத்திரை நடிகரின் கார்'.. 'உயிரைப் பறித்த பரிதாபம்'!
- 'சும்மா இருக்க காரை ஏன் உடைக்குறிங்க'... 'பிக் பாஸ்' பிரபலத்தை 'ரவுண்டு கட்டிய' மக்கள்... வைரலாகும் வீடியோ!
- நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்!
- மாணவர்களுடன் சேர்ந்து போராட்ட அறிவிப்பு: வீட்டுக்காவலில் புகழ்பெற்ற நடிகர்!