அட...! இந்த ஊருல ஆம்பளைங்க மட்டும் விரதம் இருக்காங்களா...! 'புதுசா இருக்கே...' அப்படி அவங்களுக்கு என்ன வேண்டுதல்...?! - வினோத திருவிழா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக இந்தியாவில் அதிக அளவில் பெண்களே விரதம் இருக்கின்றனர் என கூறுவதுண்டு. அதற்கு நேர் எதிராக தமிழகத்தில் ஆண்கள் மட்டும் விரதம் இருந்து, ஊர் மக்கள் அனைவரும் திருவிழா கொண்டாடும் வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடைபெற்றுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் முதல்நாடு என்னும் கிராமத்தில் கடந்த 3 தலைமுறைகளுக்கும் மேலாக, வருடா வருடம் புரட்டாசி மாதத்தின் 2-வது வாரத்தில் எல்லை பிடாரி அம்மனுக்கு திருவிழா கொண்டாடுகின்றனர்.
ஆனால் இந்த திருவிழாவில் வழக்கத்திற்கு மாறாக ஆண்கள் விரதம் இருந்து திருவிழாவை நடத்துகின்றனர். அதுமட்டுமில்லால் இது ஒரு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஒரு திருவிழாவாக நடைபெறுகிறது.
இந்த வருடமும் முதல்நாடு கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது ஊருக்கு மழை வேண்டியும், நல்ல மகசூல் வேண்டியும் காட்டுப்பகுதியில் நள்ளிரவில் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், எல்லை பிடாரி அம்மனுக்கு பச்சரிசி சாதம் சமைத்து படையலிட்டு, அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு படையல் உணவை பங்கிட்டு உண்டனர்.
மற்ற செய்திகள்