ஊரடங்கு நேரத்தில் 'கள்ளக்காதலியை' பார்க்க... 200 கிலோமீட்டர் 'பயணித்த' முதியவர்... ஹைலைட்டே காரில் ஒட்டியிருந்த 'ஸ்டிக்கர்' தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்காதலியை பார்க்க காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, முதியவர் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் அமுதா(37). கணவரை பிரிந்த அமுதா மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அஹமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் மைதீனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டார். அமுதா மலேசியாவை விட்டு வந்து தன்னுடைய வீட்டில் தற்போது தங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அமுதாவை பார்க்க நினைத்த மைதீன் அதற்காக திட்டம் ஒன்றை போட்டார். அதன்படி  மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு  ராமநாதபுரத்தில் இருந்து அமுதா வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் தற்போது அமுதா வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அவரது மகன்,மகள், அமுதா, மைதீன் நால்வரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்