"என் மகனை கொண்ணுட்டாங்க" கதறி அழுத மணிகண்டனின் தந்தை... வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காவல் துறை தாக்கியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்படும் விவகாரத்தில் அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமதின்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 4ம் தேதி போலீசார் விசாரணைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மறுநாள், கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மணிகண்டனின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடலை வாங்குவது தொடர்பாக போலீசார் மற்றும் உறவினர்களிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனிடையே மணிகண்டனின் பெற்றோர், விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் அடித்து துண்புறுத்தியதால்தான் தங்கள் மகன் உயிரிழந்துள்ளார்; ஆகவே சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமதின்றத்தின் மதுரை கிளை மாணவர் மணிகண்டனின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர் மணிகண்டன் கடந்த சனிக்கிழமை ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதுரை மேலூரில் இருந்து திருடப்பட்டது என்றும், திருடப்பட்ட வாகனத்தில் சென்னை பதிவு எண் பொருத்தி பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள். மதுரை மேலூர் காவல் நிலையத்தில் திருடுபோன இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் இதுபற்றி புகார் அளித்துள்ளார் என்றும இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இதனிடையே மணிகண்டன் மாணவர் என்பதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் வாகனத்தை திருப்பிக் கொடுத்து அவரது தாயின் முன் எழுதி வாங்கிவிட்டு அவருடன் திருப்பி அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கான காணொளி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவில் தெளிவாக உள்ளது என்றும் , உறவினர்கள் சொல்வதை போல் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளானதால் மணிகண்டன் உயிரிழந்தற்கான எந்த பதிவும் இல்லை என்றும் எனவேல் மணிகண்டன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே மணிகண்டனின் பெற்றோர் கூறும் போது , ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட தனது மகனை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி கதறி அழுதனர். இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவங்க கொஞ்சம் கூட மாறல"!.. தாலிபான்களிடம் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய... மருத்துவ மாணவர் போட்டுடைத்த பகீர் தகவல்!
- VIDEO: ‘ராகுல் அண்ணா...!’.. உணர்ச்சிவசப்பட்ட மாணவி.. ‘அங்க பாருங்க, அழக்கூடாது’.. புதுச்சேரி கல்லூரியில் நடந்த ருசிகரம்..!
- 'ரயில்களில் மாணவிகளுக்கு மட்டும் அனுமதி'... 'காலேஜ் ஆரம்பிச்சும் ஒழுங்கா போக முடியல'... பரிதவிப்பில் மாணவர்கள்!
- “படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!’.. ‘கேள்விப்பட்டதும் நடிகை செய்த காரியம்!’
- “பாய் ஃப்ரண்ட் இல்லாத ‘சிங்கிள்’ மாணவிகளுக்கு காலேஜ்க்குள்ள வர அனுமதி இல்ல!” - ‘பேராசிரியர்’ கையெழுத்துடன் ‘கல்லூரியை’ அதிரவைத்த ‘வைரல்’ நோட்டீஸ்!
- முதல்வன் பட பாணியில் ஒருநாள் ‘முதல்வர்’.. வரலாறு படைத்த கல்லூரி ‘மாணவி’.. குவியும் வாழ்த்து.. எந்த மாநிலம் தெரியுமா..?
- 'ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா!'... ‘தமிழக’ அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு! ‘மகிழ்ச்சிப் பொங்கலில்’ கல்லூரி மாணவர்கள்!
- அந்த இடத்துல ஒரு ‘மிஸ்டேக்’ இருக்கு.. கூகுளை ‘அலெர்ட்’ பண்ணிய சென்னை மாணவருக்கு அடித்த ‘ஜாக்பாட்’..!
- 'இன்ஜீனியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி’... ‘இனி அவங்க, அவங்க தாய்மொழியிலேயே’... ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு’...!!!
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!