"ரஜினிகாந்த் அரசியல் களம் காண்பது காலத்தின் கட்டாயம்..." "தேர்தலுக்கு முன்னரே வெளிப்படையாக பேசியது... நேர்மையின் உச்சம்..." 'ரங்கராஜ் பாண்டே' புகழாரம்....

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் போன்ற நேர்மையானவர்கள் அரசியலில் களம் காண வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், இப்போது இல்லையென்றால் அடுத்த 20 வருடங்களுக்கு  நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர யாருக்கும் துணிச்சல் வராது என்றும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் ஊடகவியலாளர் ரங்கராஜ்பாண்டே பங்கேற்று நடிகர்  ரஜினிகாந்தின் அரசியல் வியூகம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசினார்.

அப்போது பேசிய அவர், "7 கோடி மக்களை சினிமா என்னும் ஊடகம் மூலம் கவரத் தெரிந்த ரஜினிகாந்த் அரசியலில் எப்படி மக்களை கவருவது என்பதை நன்றாகத் தெரிந்தவர், இருப்பினும் சினிமாவில் நடிக்கத் தெரிந்த ரஜினிகாந்த் அரசியலில் நடிக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பதாகக்" கூறினார். 

"ரஜினிகாந்த 3 விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார். அவற்றை அவர் நினைத்திருந்தால் தேர்தலுக்கு பிறகு குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்னதாகவே  வெளிப்படையாக சொல்லிவிட்டு மக்களை சந்திக்க நினைக்கும் ரஜினிகாந்தின் நேர்மை தமிழகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளதாக" குறிப்பிட்டார்.

"சினிமாவில் கடந்த 30 வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து கொண்டு, செல்வாக்குமிக்க நபராகத் திகழும் ரஜினிகாந்த், தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் எனக் குறிப்பிடுவதும், அரசியல் மாற்றத்தை விரும்பினால் தம்மை ஆதரியுங்கள் எனக் குறிப்பிடுவதும் அவரது நேர்மைக்கு எடுத்துக்காட்டு" எனக் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து இவ்வளவு பேசிய பின்பும் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் அமைதியாகத்தான் உள்ளன எனக் குறிப்பிட்ட அவர், அவரை ஆதரியுங்கள் என கூறமாட்டேன், அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து விவாதங்களை முன்வையுங்கள் எனக் குறிப்பிட்டு பேசினார்.

RAJINIKANTH, RANGARAJ PANDE, POLITICAL ENTRY, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்