"ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்"!.. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் மே7ம் தேதி திறக்கப்பட்டது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் டாஸ்மாக் திறக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து <a href="https://twitter.com/hashtag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்</a></p>&mdash; Rajinikanth (@rajinikanth) <a href="https://twitter.com/rajinikanth/status/1259347183192735750?ref_src=twsrc%5Etfw">May 10, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்